Advertisment

EPFO ரூ 7 லட்சம் ஃப்ரீ இன்சூரன்ஸ்… முக்கியமான இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

EPFO ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் தான். இந்த திட்டத்தின் 5 முக்கிய அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
EPFO ரூ 7 லட்சம் ஃப்ரீ இன்சூரன்ஸ்… முக்கியமான இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) 1976ன் கீழ், அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், எவ்வித தொகையும் ஊழியர்கள் செலுத்தாமலே இலவசமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை பெறலாம். EPFO ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் தான். இந்த திட்டத்தின் 5 முக்கிய அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

Advertisment
  1. அதிகப்பட்ச ப்ரீ இன்சூரன்ஸ் தொகை

பணியில் இருக்கும் போது உயிரிழந்தால், EPFO உறுப்பினரின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு அதிகபட்சமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். முன்னதாக, இந்த திட்டத்தின் தொகை ரூபாய் 6 லட்சமாக இருந்தது. ஏப்ரல் 2021 இல் அதன் தொகை அதிகரிக்கப்பட்டது.

  1. குறைந்தபட்ச உறுதி தொகை

EDLI திட்டத்தின் கீழ் , இறந்த உறுப்பினர் தனது மரணத்திற்கு 12 மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக பணியில் இருந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய்க்கான சலுகை கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஊழியர்கள் பணம் செலுத்தத் தேவையில்லை

இந்த திட்டத்திற்காக EPFO ஊழியர்கள் கூடுதலமாக பணம் வழங்க தேவையில்லை. EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்திலிருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.

  1. திட்டம் கட்டாயம்

EPFOவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், தானாகவே இந்தச் சேமிப்பு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் தான்.

  1. நேரடி வங்கி பரிமாற்றம்

EDLI திட்டத்தில் உங்களது நியமனதாரர் அல்லது வாரிசுகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் செலுத்தப்படும்.

EDLI திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட காப்பீட்டு நன்மையைப் பெற, நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசு form 51F நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News Epfo Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment