savings account bank interest savingsaccount interest : வங்கிக் கணக்கு பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க உதவுகின்றது. திருடர் பயமின்றியும், நம்மிடமிருந்தால் செலவாகிவிடுமோ என்ற பயமின்றியும் பணத்தை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். மேலும் நமக்கு தேவைப்படும்போது வங்கிக்கு சென்றோ அருகிலுள்ள ஏடிஎம்ற்கு சென்றோ எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களில் சம்பளம் மற்றும் பென்சன் போன்றவை கையில் பணமாகக் கொடுக்கப் படாமல் நேரடியாக வங்கிக் கணக்கிலே வரவு வைக்கப்படுகின்றன. அரசின் முதியோர் உதவித்தொகை கூட அப்படித்தான் வழங்கப்படுகின்றது.
மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்.எனவே, சேமிப்பு கணக்குகளில் வைக்கும் பணத்திற்கு அதிக வட்டி விகித லாபம் வழங்கும், பொதுத் துறை வங்கிகள் விவரங்கள்.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் வரையில் சேமிப்பு கணக்கில் வைக்கும் போது 3.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும். இது 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்பு கணக்கில் பணம் வைத்து இருந்தால் 3.6 சதவீத லாபம் பெற முடியும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு அதிகபட்சமாக 3.1 சதவீத லாபத்தை வழங்குகிறது.
பஞ்சாப் & சிண்ட் வங்கி
பஞ்சாப் & சிண்ட் வங்கியின் சேமிப்பு கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்து இருந்தால் 3.1 சதவீத லாபம் கிடைக்கும். 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்து இருந்தால் 3.5 சதவீத லாபம் கிடைக்கும்.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்.
யூனியன் வங்கி
யூனியன் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news