பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? இவ்வளவு பெரிய மாற்றம் வந்தாச்சு உங்களுக்கு தெரியுமா?

பிபிஎப் மற்றும் 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டங்களின் வட்டி விகிதம் 8 சதவீதம்

வங்கிகளின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு இதுக் குறித்து விவரங்கள் தெரியும்?

சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைத்து வருகிறது. 2018-2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் சற்று உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-வது காலாண்டில் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். பிபிஎப், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.

ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எஸ்.பி.ஐ…வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

2 மற்றும் 5 வருட டெபாசிட் திட்டத்தின் மீதான வட்டி விகிதம் 7 மற்றும் 7.8 சதவீதமாகவே தொடர்கிறது. இதேபோன்று 5 வருட ரெக்கரிங் டெபாசிட் மீதான வட்டி விகிதத்திலும் மாற்றமில்லை.

பிபிஎப் மற்றும் 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டங்களின் வட்டி விகிதம் 8 சதவீதமாகவே தொடர்கிறது. மேலும் 5 வருட மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 7.7 சதவீத லாபம் அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு 8.7 சதவீத வட்டி விகித லாபம் வழங்கப்பட உள்ளது. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகித லாபமும் நடப்புக் காலாண்டில் 7.7 சதவீதமாகவே தொடர்கிறது.முன்னதாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் மத்திய அரசு சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.4% வரை உயர்த்தியது முதலீட்டாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close