sbi account opening state bank account opening sbi bank : புதுசா பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறீங்களா? உங்களுக்கான பெஸ்ட் சேவைகளை பாருங்கள்.
Advertisment
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, நாடு முழுவதும் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி சேமிப்பு கணக்கு சேவை, பரிவர்த்தனை வசதிகளை வழங்குவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் அளிக்கிறது.
இந்தியா பேமென்ட் போஸ்ட் வங்கி மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. வழக்கமான சேமிப்பு கணக்கு மூலம், எந்தவித கட்டணமும் செலுத்தாமல், பணத்தை எடுக்கலாம். இதற்கான அணுகல் மையங்கள் அல்லது வீடு தேடிய சேவைக்கு விண்ணப்பித்து, இந்த வகை கணக்கை துவக்கலாம். ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு என்பதால் குறைந்த பட்ச தொகையை பராமரிக்க வேண்டாம். காலாண்டு சேமிப்பு கணக்கு அறிக்கை இலவசமாக அளிக்கப்படும்.
இரண்டாவதாக வழங்கப்படும், டிஜிட்டல் சேமிப்பு கணக்கை, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயலி மூலம் துவக்கலாம். பான் கார்டு மற்றும் ஆதார் எண் விபரங்களை அளித்து, எளிதாக இந்த சேமிப்பை கணக்கை துவக்கலாம். எனினும், ஒராண்டுக்குள், கே.ஒய்.சி.,நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின், இது வக்கமான கணக்காக மேம்படுத்தப்படும். இவைத்தவிர, ‘பேஸிக் அக்கவுன்ட்’ எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு சேவையும் வழங்கப்படுகிறது. வழக்கமான சேமிப்பு கணக்கு அம்சங்கள் கொண்டிருந்தாலும், மாதம் நான்கு முறை மட்டுமே, பணம் எடுக்க முடியும்.
இந்திய அஞ்சலகத்துறை வழங்கும் சேமிப்பு கணக்குடன், பேமென்ட் வங்கி கணக்கு சேவையை இணைத்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்பட்டால், பேமென்ட் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால், எஞ்சிய தொகை அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். நான்கு வகையான சேமிப்பு கணக்குகளுமே, 4 சதவீத வட்டி அளிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news