Advertisment

உங்க ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரம்; போலிகள் இப்படி ஏமாத்துறாங்க! எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

SBI alerts customers for FD fraud: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அவர்களின் முதலீடுகளான நிலையான வைப்புத்தொகைகள் (எஃப்.டி) மீது நடக்கும் தொழில்நுட்ப மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. தற்போது நடக்கும் மோசடிகள் பெரும்பாலும் டெபாசிட்களை குறிவைத்தே நடக்கிறது.

author-image
WebDesk
New Update
sbi pension seva

நாம் தினந்தோறும் வங்கி மோசடி தொடர்பான செய்திகளை கேட்டு வருகிறோம். அதில் குறிப்பாக மொபைலுக்கு வரும் ஒடிபி எண்ணை கேட்டு வரும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம், ஒடிபியை சொன்னதும் கணக்கில் இருந்து மொத்த பணமும் காலியாகி விடுவதாக தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

Advertisment

இது போன்ற மோசடிகளை தடுக்கும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அவர்களின் முதலீடுகளான  நிலையான வைப்புத்தொகைகள் (எஃப்.டி) மீது நடக்கும் தொழில்நுட்ப மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. தற்போது நடக்கும் மோசடிகள் பெரும்பாலும் டெபாசிட்களை குறிவைத்தே நடக்கிறது. சைபர் கிரிமினல்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில், ஆன்லைன் மூலம் நிலையான வைப்புகளை உருவாக்கியுள்ளதாக, ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை தங்கள் கணக்கு தொடர்பான தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி  கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கடவுச்சொல் / ஓடிபி / சிவிவி எண் / ஏடிஎம் அட்டை எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும்,  இந்த விவரங்களை வங்கி ஒருபோதும் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது அஞ்சல் மூலம் கேட்காது எனவும் தெரிவித்துள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எஸ்பிஐ ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் வீழாதீர்கள், கடவுச்சொல் / ஓடிபி / சிவிவி எண்/ ஏடிஎம் அட்டை எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை நாங்கள் ஒருபோதும் தொலைபேசியில் கேட்க மாட்டோம் என்று எஸ்பிஐ வங்கி ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை எஸ்பிஐ சமூக ஊடகங்கள் வாயிலாக தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வகையான இணைய மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் எஃப்.டி கணக்கைப் பணத்தை பறிக்க பயன்படுத்துகின்றனர்.

மோசடி செய்பவர்களின் மொத்த செயல்பாடுகளில், அவர்களின் முதல் இலக்கு பாதிக்கப்பட்டவர்களின் எஃப்.டி கணக்குகளை தங்கள் வங்கி விவரங்களுடன் உருவாக்கி, சில தொகையை மாற்றிக் கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, OTP ஐ வங்கி அதிகாரிகள் பேசுவதுபோல் கேட்கிறார்கள், OTP பகிரப்பட்டால் எஃப்.டி தொகை முழுவதும் அவர்களின் சொந்த கணக்கிற்கு மாற்றிக் கொள்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Fixed Deposit Sbi Bank Sbi Customer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment