Advertisment

SBI Alert: எஸ்பிஐ எச்சரிக்கை... உங்க பணம் பாதுகாப்பா இருக்கணும்னா இந்த 3 விஷயத்தை மறக்காதீங்க!

SBI alerts phishing attack from online fraudsters: ஆன்லைன் மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்; எஸ்பிஐ எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
SBI Alert: எஸ்பிஐ எச்சரிக்கை... உங்க பணம் பாதுகாப்பா இருக்கணும்னா இந்த 3 விஷயத்தை மறக்காதீங்க!

விரைவான மற்றும் வசதியான வங்கி அனுபவத்தை பெற ஆன்லைன் வங்கி சிறந்த வழி தான். ஆனால் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, மோசடி செய்பவர்களை தவிர்க்க அடிப்படை கணக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றினால் மட்டுமே இது சிறந்த வழியாக இருக்கும்.

Advertisment

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மோசடி செய்பவர்களிடமிருந்து உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க மூன்று பாதுகாப்பு குறிப்புகளை வெளியிட்டுள்ளது. போலி எஸ்எம்எஸ் மோசடிகளை எதிர்கொள்வதற்காக, எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் "உங்கள் நிதி கணக்குகளைப் பாதுகாப்பதன் வழியாக போலி எஸ்எம்எஸ்-ஐ தவிருங்கள். பாதுகாப்பான வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறியுள்ளது.

மோசடி செய்பவர்களிடமிருந்து உங்கள் நிதி கணக்குகளைப் பாதுகாக்க, தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள், OTP ஐப் பகிராதீர்கள், அந்நியர்களிடமிருந்து நட்புக் கோரிக்கைகளைத் (Friend Request) தவிர்க்கவும், என SBI எச்சரித்துள்ளது.

ஃபிஷிங் இணைப்பு மோசடிகளின் அதிகரிப்பு குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் கணக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது, "இந்த இணைப்புகளை உங்கள் இன்பாக்ஸில் பெறுகிறீர்களா? தெளிவாக இருங்கள்! இந்த ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள். கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்! "

நேஷனல் வங்கியில் இருந்து உங்களுக்கு இலவச பரிசு கிடைத்திருக்கிறது என வரும் இணைப்புகளை எடுக்காதீர்கள், அவை ஃபிஷிங் இணைப்புகளாக இருக்கலாம். இலவசங்களை வழங்குவதாக கூறும் ஃபிஷிங் இணைப்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கணக்கு தனியுரிமைக்கு வரும்போது தெரியாத வலைத்தளங்கள் உங்கள் கணக்கு சான்றுகளுக்கு அபாயகரமானதாக இருக்கலாம். இதற்காக SBI தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில குக்கீகள் அங்கீகரிக்கப்படாத, பாதுகாப்பற்ற வலைத்தளங்களில் இருந்து உங்கள் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் SBI உடன் பாதுகாப்பாக இருங்கள்." என பதிவிடப்பட்டுள்ளது.

மற்றொரு ஒரு வீடியோ ட்வீட்டில் எஸ்பிஐ "அனைத்து குக்கீகளும் பாதுகாப்பாக இல்லை, சில தவறான இணைப்புகளுடன் வந்து உங்கள் தரவைத் திருடுகின்றன. தெரியாத மற்றும் பாதுகாப்பற்ற வலைத்தளங்களிலிருந்து குக்கீகளை ஏற்க வேண்டாம். இந்த குக்கீகள் உங்கள் தனிப்பட்ட தரவை திருடும் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்." என கூறியுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள கணக்கு மோசடிகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே வங்கிக்கு தெரிவிக்கவும். எந்தவொரு வங்கி மோசடியிலும் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள், ஆன்லைன் மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்களைத் தவிர்க்க எஸ்பிஐ வழங்கும் உதவிக்குறிப்புகளை எப்போதும் பின்பற்றுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sbi Sbi Bank Alert
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment