Advertisment

சொந்த வீடு கனவை நினைவாக்கும் எஸ்.பி.ஐ., அதிரடி ஆஃபர்.. வட்டி வீதங்கள் இதோ.!

சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை அளிக்க எஸ்.பி.ஐ., தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

author-image
WebDesk
New Update
SBI announces BUMPER Home Loan bonanza ahead of Diwali

ஹோம் லோனில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டு கடன் வழங்குதல் பிரிவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இதன் கீழ் இதுவரை 6 டிரில்லியன் (600 கோடி) சொத்துகள் உள்ளன.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்காக பண்டிகை பொனான்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பல்வேறு பிரிவுகளில் வாங்குபவர்களின் பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சலுகைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisment

மேலும், சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை அளிக்க எஸ்.பி.ஐ., தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அந்த வகையில், நடப்பு பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன்களை அனைத்து வருங்கால வாங்குபவர்களுக்கும் மலிவு விலையில் வழங்குவதை எஸ்.பி.ஐ., நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன்களில் 0.25%, டாப் அப் கடன்களில் 0.15% மற்றும் சொத்து மீதான கடனில் 0.30% வரை சலுகையை வழங்கும். ஜனவரி 31, 2023 வரையிலான வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதன் மூலம், இந்த ஒப்பந்தத்தை வங்கி மேலும்எளிமையாக்கி உள்ளது.

தொடர்ந்து, புதிய வீட்டுக் கடன்கள் மற்றும் கையகப்படுத்துதல் போன்றவற்றை வாங்குபவர்களுக்கான வட்டி விகிதம் 8.40% ஆகவும், அலங்காரப் பொருள்கள், புதுப்பித்தல், வீட்டு மேக்ஓவருக்கான டாப்-அப் கடன்கள் 8.80% இல் இருந்து தொடங்கும்.

இது குறித்து, கருத்து தெரிவித்த எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா, “ஹோம் ஃபைனான்ஸில் முன்னணியில் இருக்கும் எஸ்பிஐ, ஒவ்வொரு இந்தியரின் வீட்டுக் கனவைச் செயல்படுத்த கடமைப்பட்டுள்ளோம்

ஹோம் லோனில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர். அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவை நனவாக்க பாடுபடுகிறோம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment