Advertisment

சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்

மொபைல் எண்ணில் இருந்து வங்கிக்கு மிஸ்டு கால் அளித்து தகவல்களை பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI

SBI

வங்கியில் பணம் சேமிக்கும் பொதுமக்களுக்கு இருக்கும் அதிகப்படியான கவலை தங்களின் பணம் பத்திரமாக உள்ளதா? என்பது தான். இதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் எஸ்.பி.ஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இனி கவலையே வேண்டாம்.

Advertisment

உங்கள் பணம் பத்திரமாக வங்கியில் இருக்கிறது. அதை நீங்களே வீட்டில் இருந்தப்படியும் தெரிந்துக் கொள்ளலாம்.இப்போதெல்லாம் வாடிக்கையாலர்கள் பணம் எடுக்கவும் போடவும் மற்ற பல சேவைகளுக்கும் வங்களிக்கு நேரடியாக சென்று வந்த காலம் போய் அனைத்தும் இணைய சேவையாக மாறியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் எதற்கெல்லாம் கட்டணம் தெரியுமா?

இந்த இணைய சேவை அடுத்த தளத்திற்கு சென்று, இப்போது உங்களின் சேமிப்பு கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். எப்படி தெரியுமா?

1.State Bank Freedom app :

ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப் செயலியின் மூலம் வங்கி கணக்கின் இருப்பு நிலை விசாரணை, பணம் அனுப்புதல், ரீசார்ஜ் மற்றும் போன் பில் செலுத்துதல் போன்ற பணிகளை இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே செய்யலாம்.

எச்டிஎப்சி வங்கியில் கடன்பெற இப்படியொரு அருமையான வசதியா?

2. state bank quick app:

இது மிஸ்டு கால் வங்கி அழைப்பு சேவையாகும். இதன்மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வங்கிக்கு மிஸ்டு கால் அளித்து தகவல்களை பெறலாம்.

3. State Bank buddy app:

இந்த ஆப் 13 மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பாக்கிகளை வசூலிப்பதற்கான விழிப்பூட்டல்கள், கணக்கில் கூடுதல் பணத்தை சேர்த்தல், ரீசார்ஜ் மற்றும் பில்களை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெர்சனல் லோன் வாங்க பயம் வேண்டாம்.. இதையெல்லாம் தெரிஞ்சிகோங்க!

4. State Bank mcash:

இந்த ஆப் மூலம் மூன்றாம் நபருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், பணம் பெருவோரை பெனிஃபீஷ்யரில் (beneficiary) சேர்க்காமலே நேரடியாக மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் பயன்படுத்தி பணம் அனுப்ப இயலும்.

5. State Bank anywhere:

இந்த செயலி எஸ்பிஐ ரீடெய்ல் இணைய வங்கி வாடிக்கையாளர்கள் எளிதாக பில் கட்டணங்கள் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, பயனர்களின் நிதி மேலாண்மையில் உதவுவதற்காக உதவுகிறது.

6. State Bank samadhaan:

எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களுக்கு இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் வீட்டு கடன், கல்வி கடன் போன்ற வட்டி சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் பெறலாம்.

மியூட்சுவல் பண்ட் : முதலீட்டாளர்கள் செய்யும் தவறு இதுதான்!

7. State Bank anywhere corporate :

ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட், கார்ப்ரேட் இணைய வங்கி சேவைக்கான மொபைல் பயன்பாடு செயலியாகும்.

வங்கிகள் யார் யாருக்கு எதன் அடிப்படையில் கடன் வழங்கும் தெரியுமா?

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment