Advertisment

எஸ்பிஐ ஏ.டி.எம்க்கு கிளம்புறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு போங்க

State Bank of India tamil nadu news: பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI State bank of india atm

SBI Loan Online, SBI Corona Loan, State Bank Of India, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி கடன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கொரோனா எஸ்.பி.ஐ கடன்

SBI ATM Rule: எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே பணம் எடுக்க முயற்சிக்கும் முன்பு, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருக்கிறதா? தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை வாடிக்கையாளர் நன்கு உறுதிப் படுத்திக் கொள்வது உத்தமம்!

Advertisment

SBI YONO app: டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - இன்னமும் தெரிஞ்சுகாம இருந்தா எப்படி?

எஸ்பிஐ வங்கி, பொதுத்துறை வங்கிகளிலேயே சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ‘பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளது. மேலும் இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் , எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணம் எடுக்க முயற்சிக்கும் முன்பு, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருக்கிறதா? தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை வாடிக்கையாளர் நன்கு உறுதிப் படுத்திக் கொள்வது உத்தமம்!

SBI ஏடிஎம் போக கண்டிப்பா செல்போன் தேவை... இல்லனா பணம் எடுக்க முடியாது! - புதிய திட்டம் அமல்

 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment