Advertisment

SBI News: ரூபாய் 50 லட்சம் வரை உடனடி கடன்; இதை மட்டும் செய்தால் நடைமுறை கட்டணம் ரத்து!

Sbi Gold Loans at an interest rate of 7.5 per cent Tamil News: ரூபாய் 50 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கியின் கவர்ச்சிகரமான தங்க நகைக் கடன் குறித்து இங்கு காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sbi bank gold loan update: Sbi Gold Loans at an interest rate of 7.5 per cent

Sbi bank gold loan update: பூஜ்ஜிய செயலாக்கக் கட்டணத்துடன் விரைவான தங்கக் கடனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான விருப்பத்தை இங்கு வழங்குகிறோம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அதன் தங்கக் கடனை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்குகிறது. மற்றும் இந்த வகை கடன்களுக்கு செயலாக்க கட்டணம் இல்லை என்று எஸ்பிஐ அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Advertisment

உங்கள் வீட்டில் இருக்கும் பயன்படுத்தப்படாத அல்லது செயலற்ற தங்கத்தை சிறப்பாகப் பயன்படுத்த இது ஒரு அறிய வாய்ப்பாகும். மேலும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தங்க நகை கடன்களுக்கு 7.5 சதவீத வட்டி மட்டுமே விதிக்கின்றது. இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்ககளை சுருக்கமாக இங்கு காணாலாம். 

தங்க நகை கடன் வட்டி விகிதம்

எஸ்பிஐ தற்போது ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடனை வழங்கி வருகிறது. குறைந்தபட்ச காகிதப்பணி மற்றும் குறைந்த வட்டி விகிதத்துடன் வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை உறுதியளிப்பதன் மூலம் எஸ்பிஐ தங்கக் கடனைப் பெற முடியும் என்று வங்கி தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளது. 

எஸ்பிஐ தங்கக் கடனைப் பெறுவது எப்படி

எஸ்பிஐ தங்க நகைக் கடனைப் பெறுவதற்கான வழியை எஸ்பிஐ வங்கி பரிந்துரைத்துள்ளது. எந்தவொரு தகவலுக்கும் 1800-11-2211 என்ற எண்ணில் டயல் செய்து தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்க நகைக் கடனைத் தேடும் நபர் எஸ்பிஐ தொடர்பு மையத்தை நேரில் சென்றும் பார்வையிடலாம்.

தங்க நகைக் கடன் குறித்த மேலதிக தகவல்களை பெற 7208933143 என்ற எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுக்கலாம். மாற்று 7208933145 என்ற எண்ணிற்கு “GOLD” என்று டைப் செய்து ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

எஸ்பிஐ வங்கியின் தங்க நகைக் கடனில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ .50 லட்சம் வரையும், குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ .20,000 வரை பெறலாம்.

விளிம்பு

தங்க நகைக் கடன்: 25%

திரவ தங்க கடன்: 25%

புல்லட் திருப்பிச் செலுத்துதல் தங்கக் கடன்: 35%

பாதுகாப்பு

தரம் மற்றும் அளவு குறித்து சரியாக சரிபார்க்கப்பட்ட தங்க ஆபரணங்களின் உறுதியாக பாதுகாக்கப்படும் என எஸ்பிஐ உறுதியளித்துள்ளது. 

செயலாக்க கட்டணம்

பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி குறைந்தபட்சம் 250 ரூபாயுடன் கடன் தொகையில் 0.25 சதவீதம் செயலாக்க கட்டணமாக பெறப்படும். தங்க நகைக் கடன் பெற யோனோ செயலி மூலம் அப்பளை செய்தால் செயலாக்க கட்டணம் இல்லை.

வட்டி விகிதம்

எந்தவொரு கடன் தொகைக்கும்: MCLR-1yr ஐ விட 0.50 சதவீதம்

• மற்றவை: தங்க மதிப்பீட்டாளர் கட்டணங்கள் விண்ணப்பதாரரால் செலுத்தப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Sbi Gold Loan Sbi Bank Sbi Banking Tamil Business Update Business Update 2 Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment