Advertisment

SBI Alert: உங்க அக்கவுண்ட் முடங்கும் அபாயம்; இந்த சின்ன அப்டேட்டை உடனே பண்ணுங்க!

How to update SBI Bank’s KYC details in Tamil: எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க வங்கியின் கிளையை பார்வையிட வேண்டியதில்லை' என்று பதிவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI new rules, SBI cash withdrawal

SBI Bank  KYC update Tamil News: நாட்டிலே மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி (KYC) விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் புதுப்பிக்கும் நோக்கத்திற்காக தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க வங்கியின் கிளையை பார்வையிட வேண்டியதில்லை' என்று பதிவிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், சில முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, கணக்கு வைத்திருப்பவர்கள் KYC ஆவணத்துடன் தனிப்பட்ட முறையில் கிளையை பார்வையிட வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

KYC புதுப்பித்தலின் காரணமாக மே 31ம் தேதி வரை எந்த கணக்குகளும் முடக்கப்படாது என எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது

KYC விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?

நாம் முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, வாடிக்கையாளர்கள் தங்கள் KYC விவரங்களை புதுப்பிக்க மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக முகவரி மற்றும் அடையாளத்திற்கான சான்றுகளை தங்கள் வங்கி கிளைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழியில் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தேவையான ஆவணங்களை கிளையின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நீங்கள் உங்கள் வங்கி கணக்கை KYC புதுப்பிப்பு செய்யாமல் இருப்பதை உங்களின் வங்கி கிளை சுட்டி காட்டி இருந்தால் மற்றும் KYC புதுப்பிப்புக்கு தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வங்கியின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் வங்கியில் பதிவு செய்த மின்னஞ்சல் மூலமாக மட்டுமே ஆவணங்களை அனுப்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

KYC ஐப் புதுப்பிப்பதற்கான தேவையான ஆவணங்கள்

தனிநபர்களுக்கு

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு)

வாக்காளர் அடையாள அட்டை

ஓட்டுனர் உரிமம்

ஆதார் அட்டை

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத (NREGA) அட்டை

பான் அட்டை

அடையாளச் சான்று மற்றும் முகவரியின் சான்று (நிரந்தர அல்லது நடப்பு) நோக்கிய எந்த ஒரு ஆவணமும்.

சிறார்களுக்கு

சிறார்களைப் பொறுத்தவரை, குழந்தையின் வயது 10 வயதுக்குக் குறைவாக இருந்தால், கணக்கை இயக்கும் நபரின் அடையாளச் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். மைனர் கணக்கை சுயாதீனமாக இயக்கும் சந்தர்ப்பங்களில், வேறு எந்த நபர்களையும் போலவே அடையாளம் காணல் மற்றும் முகவரி சரிபார்ப்புக்கான KYC நடைமுறை பொருந்தும்.

இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களுக்கு (என்.ஆர்.ஐ)

பாஸ்போர்ட் மற்றும் இருப்பிட விசா பிரதிகள், முறையாக கீழ் உள்ளவர்களால் சான்றளிக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

வெளிநாட்டு அலுவலகங்கள்

அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர்

இந்திய தூதரகம்

வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட (ஏ / பி வகை அந்நிய செலாவணி கையாளுதல் கிளை) கிளை மூலம் கையொப்பங்கள் சரிபார்க்கக்கூடிய நிருபர் வங்கிகளின் அதிகாரிகள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Business Business Update 2 Tamil Business Update Sbi Bank Update Sbi Bank Sbi Banking Sbi Bank Alert
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment