பீம் ஆதார் எஸ்பிஐ - டெக்னாலஜி தெரிஞ்சுகிட்டா எல்லாம் ஈஸி தான்!

உங்களுடைய ஆதார் எண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு பணம் செலுத்தும் வசதிதான் ஆதார் பே. ஆனால் பீம் ஆப் என்பது அப்படியல்ல. பீம் ஆப் ஆனது...

பீம் ஆதார் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? பீம் ஆதார் குறித்தும், அதை பயன்படுத்தி எஸ்பிஐ மூலம் எளிதான நடைமுறையில் நீங்கள் பணம் எப்படி அனுப்புவது என்பது குறித்தும், எப்படி வாங்குவது என்பது குறித்தும் இந்த செய்தியில் நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு எந்த கார்டும் தேவையில்லை. வங்கியோ, ஏடிஎம்முக்கோ கூட செல்லத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்க.

பீம் ஆதார் பே ஆப் என்றால் என்ன?

உங்களுடைய ஆதார் எண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு பணம் செலுத்தும் வசதிதான் ஆதார் பே. ஆனால் பீம் ஆப் என்பது அப்படியல்ல. பீம் ஆப் ஆனது வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஒரு இ-வாலட் போல செயல்படுவது. பீம் ஆப் மூலமாக நீங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு பணம் அனுப்பவும், வாங்கவும் முடியும். ஆனால் அதற்கு இணையவசதி கொண்ட, ஸ்மார்ட்போன் கண்டிப்பாக தேவை. ஆதார் பே ஆப்பிற்கு இவை தேவையில்லை.

மேலும் படிக்க – எஸ்பிஐ-ன் சிறப்பான இந்த 3 திட்டங்களும் உங்களுக்கு தான்

இதன் பயன்கள் என்னென்ன?

எளிமையான மற்றும் விரைவான பணப்பரிவர்த்தனை என்பதுதான் முதல் சிறப்பு. மேலும் உங்களுடைய பயோமெட்ரிக் தகவலின் அடிப்படையில் நடைபெறுவதால் பாதுகாப்பானதும் கூட. வணிகர்களும் பி.ஒ.எஸ் மெஷின் வைத்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இதில் இல்லை. எங்கே சென்றாலும் உங்களுடைய கைரேகையைக் கொண்டு மட்டுமே பணம் செலுத்திவிட்டு வரலாம். கையில் மொபைல் இருக்க வேண்டும், இன்டர்நெட் வேண்டும் என்ற அவசியம் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இல்லை. இதுமட்டுமின்றி கார்டு நிறுவனங்கள் மற்றும் பி.ஓ.எஸ் மெஷின்களுக்கான சேவைக் கட்டணமும் இதில் கிடையாது. பி.ஓ.எஸ் மெஷின்களை விடவும் மொபைல்போன்கள் நடைமுறையில் எளிதானவை.

BHIM-Aadhaar-SBI  பயன்படுத்த பின்பற்ற வேண்டியவை

எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்ட ஆதார்
மைக்ரோ யூ.எஸ்.பி / யூ.எஸ்.பி சி-டைப் Connector கொண்ட சான்றளிக்கப்பட்ட பயோமெட்ரிக் ரீடர் (Biometri Reader)
இன்டர்நெட்  கூடிய Android ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தை இணைப்பதற்கான OTG ஆதரவு
Android பதிப்பு 4.2 வெர்ஷன் அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன் வேண்டும்.
தொலைபேசியில் பயோமெட்ரிக் ரீடரை இயக்கும் திறன் இருக்க வேண்டும்.

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு எஸ்.பி.ஐ அறிவித்த மகிழ்ச்சி செய்தி…

INDIVIDUALS (RETAIL MERCHANTS): பதிவுசெய்தல் செயல்முறை முழுமையாக தானியங்கி மற்றும் தனிப்பட்ட வணிகர்களுக்கான பயன்பாடாகும். வணிகர்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ஆப்-ஐபதிவிறக்கம் செய்து தனது ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் Credentials பயன்படுத்தி தன்னை பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்தலின் போது, வணிகர் எஸ்பிஐ உடன் பராமரிக்கப்படும் தனது வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பரிவர்த்தனை வரம்புகள் (தனிப்பட்ட வணிகர்களுக்கு)

BHIM-Aadhaar-SBI பரிவர்த்தனைகளில் பின்வரும் பரிவர்த்தனை வரம்புகள் பொருந்தும்:

நுகர்வோர் பக்கம் (பணம் செலுத்துபவர் / வாங்குபவர்)
ரூ. 2,000 /  – ஒரு பரிவர்த்தனைக்கு
ரூ. 5,000 / – ஒரு நாளுக்கு ஒரு ஆதார் எண் வீதம்
ரூ. 20,000 / – ஒரு மாதத்திற்கு ஒரு ஆதார் எண்ணுக்கு

வணிகர் பக்கம் (விற்பனையாளர்)
ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு நாளைக்கு 25,000 / – ரூபாய்
ரூ. 1,00,000 / – ஒரு மாதத்திற்கு ஒரு ஆதார் எண்ணுக்கு.

BHIM-Aadhaar-SBI ஆப் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close