Advertisment

உங்க Withdrawl Form மூலமா மற்றவங்க பணம் எடுக்க முடியாது: எஸ்பிஐ புதிய விதிகள் அறிவிப்பு

காசோலை பயன்படுத்தி மூன்றாம் தரப்பினர் பணம் எடுப்பதற்கு கே.ஒய்.சி. தேவைப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI new rules, SBI cash withdrawal

SBI cash withdrawal with cheque and form rules for self and third party changed : கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், எஸ்.பி.ஐ வங்கி காசோலை மற்றும் திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non - home cash திரும்பப் பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது. மே 29ம் தேதி இது தொடர்பாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் ஒன்றும் மூலம் தகவல் அளித்துள்ளது. அதில் இந்த தொற்றுநோய்களில் எங்கள் வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்காக, எஸ்பிஐ காசோலை மற்றும் திரும்பப் பெறுதல் படிவத்தின் மூலம் non-home cash-ஐ திரும்பப் பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது

Advertisment

இந்த புதிய வரம்புகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்த எஸ்.பி.ஐ., தங்களின் வாடிக்கையாளர்கள் third party-களுக்கு வித்ட்ராவல் படிவங்களின் மூலம் பணம் அனுப்ப முடியாது என்றும் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

தங்களின் கிளை இல்லாமல் பிற கிளைகளில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ அறிவித்திருக்கும் புதிய வரம்புகள் என்ன?

உங்களின் சொந்த கணக்கில் இருந்து பணம் எடுக்கின்றீர்கள் என்றால் பாஸ்புக் கட்டாயம். ரூ. 25,000 வரை நீங்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

காசோலைகளை பயன்படுத்தி ரூ. 1 லட்சம் வரையில் பணம் எடுத்துக் கொள்ளலாம்,

மூன்றாம் தரப்பினரால் காசோலை செலுத்தி பெறப்படும் பணத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

காசோலை பயன்படுத்தி மூன்றாம் தரப்பினர் பணம் எடுப்பதற்கு கே.ஒய்.சி. தேவைப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. உங்களின் கிளை இல்லாமல் இதர எஸ்.பி.ஐ. கிளைகளில் நீங்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயமாக பாஸ்புக்கினை எடுத்து செல்ல வேண்டும். அப்போது தான் உங்களால் ரூ. 25 ஆயிரம் வரையில் பணம் எடுக்க முடியும்.

உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நீங்கள் ஒருவரை காசோலையுடன் அனுப்பினால், பணத்தை ஒப்படைப்பதற்கு முன்பு காசோலையை எடுத்துச் சென்ற நபரின் KYC ஐ வங்கி கோரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Sbi Banking
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment