Advertisment

மற்ற வங்கிகளை விட எஸ்பிஐ-யில் கிரேடிட் கார்டு வட்டி ரொம்ப ரொம்ப கம்மி!

சில்வர் கார்டு, கோல்டு கார்டு, ப்ளாட்டினம் கார்டு, டைட்டானியம் கார்டு என ஒவ்வொரு வங்கியிலும் பல வகையான கிரேடிட் கார்டுகள் உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi creditcard online sbi

sbi creditcard online sbi

sbi creditcard online sbi : நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கியக் காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதாலே கிரெடிட் கார்டுகளை வரும்பி வாங்குகிறோம். இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூடக் கட்டத் தேவையில்லை.

Advertisment

பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்தக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தத்து.

ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது என்பதோடு எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.

கிரெடிட் கார்டுகளில் பலவகை உண்டு. சில்வர் கார்டு, கோல்டு கார்டு, ப்ளாட்டினம் கார்டு, டைட்டானியம் கார்டு என ஒவ்வொரு வங்கியிலும் பல வகையான கிரேடிட் கார்டுகள் உண்டு.

sbi creditcard online sbi :வங்கிகளில் கிரேடிட் கார்டு!

விண்ணப்பதாரருக்கு அடிப்படைத் தகுதியாக, மாதச் சம்பளம் பெறுபவர் எனில், ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.1,80,000 இருக்கவேண்டும். இந்த வரம்பு நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். சில நிறுவனங்கள் இந்த வரம்பை ரூ.2,00,000 – 2,40,000 என வைத்துள்ளன.

சொந்தமாக தொழில் செய்பவர் எனில், ரூ.1,50,000 வரை வருமானம் இருந்தால்கூட சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் அதிகரிக்க அதிகரிக்க கடன் பெறும் தகுதியும் அதிகரிக்கும். அதற்கேற்ப அதிக கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகள் பெற தகுதி உடையவராவார்.

இந்த மாற்றம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.. ஐசிஐசிஐ அதிரடி!

கிரெடிட் கார்டு பெற வயதும் ஒரு முக்கியமான தகுதியாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 70 வயது வரை அனுமதிக்கப்படும். இதிலும், நிறுவனத்துக்கு ஏற்ப வித்தியாசங்கள் உண்டு. சில நிறுவனங்கள் 60 வயது வரை மட்டுமே கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் வித்தியாசம் கிடையாது.

கிரேடிட் கார்டுகளை பொருத்த வரையில் எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் பொதுமக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கி வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment