Advertisment

இந்த 4 பணிகளுக்கு மட்டும் தான் வங்கியில் அனுமதி: எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

வங்கிகளுக்கு செல்கிறீர்கள் என்றால் நிச்சயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

author-image
WebDesk
New Update
SBI Bank Alert Tamil News

SBI customers ALERT: State Bank of India changes rules, timings : கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தொற்று அபாயம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் பணமும் வங்கி சேவைகளும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்நிகையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி 10 முதல் 1 மணி வரை மே 31ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நேர மாற்றம்

இனி எஸ்.பி. ஐ வங்கி 10 மணி முதல் 2 மணி வரை இயங்கும். முன்பு நடைமுறையில் இருந்ததைப் போன்றே அனைத்து வங்கிசார் நிர்வாகப் பணிகளும் 50% ஊழியர்களைக் கொண்டு இயங்கும்.

மாஸ்க்

வங்கிகளுக்கு செல்கிறீர்கள் என்றால் நிச்சயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நான்கு முக்கிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்துதல், காசோலை தொடர்பான வேலைகள், வேலை தொடர்பான டி.டி./ நெஃப்ட்/ஆர்.ஜி.டி.எஸ் மற்றும் அரசு செலான் போன்றவற்றிற்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை நேரில் பயன்படுத்த இயலும். மற்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் எஸ்.பி.ஐ வங்கும் போன் பேங்கிங் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Account
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment