Advertisment

எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ டெபிட்கார்டு யூசர்கள் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indianbank net banking

indianbank net banking

sbi debit card charges : இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.

Advertisment

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபிட்/ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது பரிவர்த்தனைகள் இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால் முதல் 5 பரிவர்த்தனை மட்டுமே இலவசம்.

கூடுதலாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். நிதி பரிவர்த்தனைகள் என்றால் 17 ரூபாயும், நிதி அல்லா பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எச்டிஎப்சி ஏடிஎம் மையங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்ப்பது மற்றும் பணம் எடுப்பது இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எச்டிஎப்சி ஏடிஎம்/டெபிட் கார்டு பயன்படுத்தி 5-க்கும் மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்க்க 15 ரூபாயும், பணப் பரிவர்த்தனைக்கு 110 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருவேலை பணப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலும் 25 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

read more.. மினிமம் பேலன்ஸ் பிரச்சனை: அபராதத் தொகை நினைத்து கவலைப்படாமல் இதை செய்யுங்கள் போதும்!

எஸ்பிஐ, எச்டிஎப்சி போன்றே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment