Advertisment

1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ

SBI Mege E-auction : இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு மிகப்பெரிய e -ஏலத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI, SBI e auction, State Bank of India, Bidding, SBI mega e auction, auction

SBI, SBI e auction, State Bank of India, Bidding, SBI mega e auction, auction

இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு மிகப்பெரிய e -ஏலத்தை நடத்த உள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 1000 வணிக, குடியிருப்பு மற்றும் தொழில் துறை சார்ந்த சொத்துக்கள் இதில் ஏலத்துக்கு வருகின்றன.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட, நீதிமன்ற உத்தரவுகளால் ஜப்தி செய்யப்பட்ட அசையா சொத்துக்களை ஏலத்தில் விடும் போது எஸ்பிஐ வங்கி மிகவும் வெளிப்படைதன்மையோடு நடந்துக் கொள்ளும். அந்த சொத்துக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதால் அது ஏலம் எடுப்பவர்களை ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொள்ள கவர்ந்திழுக்கும். e- ஏலத்தில் விடப்படும் .

சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்க் மூலமாக தொரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வங்கி கிளையிலும் இந்த e- ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும், ஏலம் எடுக்க விரும்பும் சொத்து தொடர்பான விவரங்களை ஏலம் எடுப்பவர்கள் தெரிந்து கொள்ளவும் அவர்கள் ஏலத்தில் அவர்கள் எடுக்க விரும்பும் சொத்தை ஆய்வு செய்யவும் அதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என எஸ்பிஐ வங்கியின் இணையதள முகவரியில் sbi.co.in கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிஐ யின் இந்த மெகா ஏலத் திட்டத்தில் பங்குப்பெற நீங்கள் 26 பிப்ரவரி, 2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஏலத்தில் நாட்டின் எந்த மூலையில் உள்ள சொத்துக்களையும் வாங்க முடியும். ஏலத்தில் சொத்துக்களை ஆன்லைன் மூலமாக ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள், தங்களை https://www.bankeauctions.com/Sbi or https://ibapi.in/ or https://sbi.auctiontiger.net/EPROC/ or https://sbi.auctiontiger.net/EPROC/bidderregistration. இந்த இணையதளங்கள் வாயிலாக முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment