எஸ்.பி. ஐ -யில் இன்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்றீங்களா? முதலில் இதை படிங்க!

நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும்.

நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neft money transfer sbi

neft money transfer sbi

இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கும் முறைக்கு ஆன் லைன் பணப் பரிவர்த்தனை என்று பெயர். இந்த அவரச உலகில் பலரும் நெட் பேங்கி, ஆன்லை ட்ரான்சேக்‌ஷன் ஆகியவற்றிகு பழகிவிட்டோம்.

Advertisment

ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. இந்த வசதிகளுக்காக வங்கி வாடிக்கையாளர்களிடன் இருந்து குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூலிக்கின்றன.

நெட் பேங்கிங் என்றாலே அதில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும். அந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா?

எஸ்.பி.ஐ அளிக்கும் மிகச் சிறந்த கடன் வசதிகள்!

Advertisment
Advertisements

sbi internet banking : இந்த பகிர்வில் எஸ்.பி.ஐ வங்கி நெட் பேங்கி சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் தொகை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.

2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.

3. நெஃப்ட் (NEFT)>

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: