எஸ்பிஐ அதிரடி: மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகை குறைப்பு!

இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு, விதிக்கப்படும் அபராத தொகையை எஸ்பிஐ குறைத்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என்று  எஸ்பிஐ வங்கி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பலர், வேறு வங்கிகளுக்கு தங்களின் வங்கிக் கணக்கை தொடக்கினர்.

ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்த வங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. இந்த தகவல் வெளிவந்ததில் இருந்து, வாடிக்கையாளர்கள் கடுமையான விமர்சனங்களை எஸ்பிஐ வங்கி மீது வைத்தனர்.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தற்போது, குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

இதன் மூலன் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

×Close
×Close