Advertisment

சிறிய முதலீடு பெரிய லாபம்... உங்களை லட்சாதிபதி ஆக்கும் பெஸ்ட் முதலீடுகள்!

பெரும்பாலான சேமிப்பு பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில்லை. எனவே நாம் முதலீட்டை தேர்ந்தெடுக்கிறோம்.

author-image
WebDesk
New Update
investments bank tamil bank investments

investments bank tamil bank investments

sbi money investment state bank money investment state bank of india : எதில் நாம் முதலீடு செய்கிறோமோ அது நாளடைவில் வளரக்கூடியது அல்லது முன்னேறக் கூடியது. நம்முடைய நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கினால் நமக்கு நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி கிடைக்கும். அதே போல படிப்பிற்கு ஒதுக்கினால் மற்றவர்களை விட நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நாம் எதற்கு நேரம் ஒதுக்குகிறோமோ, நிச்சயம் அதில் நமக்கு வெற்றி கிடைக்கும்.

Advertisment

முதலீடு என்றவுடன் நம் கண்ணுக்கு தெரிவது ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள். மற்றவை யாவும் சேமிப்பு வகையைச் சார்ந்தது. இதில் ரிஸ்க் கிடையாது, நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி என்ன என்று நாம் பணத்தை போடும் போதே தெரியும். பெரும்பாலான சேமிப்பு பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில்லை. எனவே நாம் முதலீட்டை தேர்ந்தெடுக்கிறோம்.

தங்கத்தில் முதலீடு:

இந்தியர்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீது ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும். சிறந்த முதலீட்டுப் பொருளாக உள்ள தங்கத்தை வாங்குவதும், தேவைப்படும்போது விற்பதும் இந்தியர்களிடையே நீண்ட காலப் பழக்கமாக உள்ளது. அப்படி தங்கத்தை வாங்குவது அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதில் சில ஆபத்துகளும் உள்ளன

கோல்டு மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் தங்க பரஸ்பர நிதி முதலீடு என்பது ஆபத்தான ஒன்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது அப்போதைய காலத்தில் உள்ள தங்கத்தின் விலை நிலவரத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே இவை சந்தை நிலவரங்களால் ஆபத்தைச் சந்திக்கும் சூழல் உள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஒரு கட்டத்தில் சாதகமான வருமானத்தை அளிக்கலாம் அல்லது பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மியூட்சல் ஃபண்டு:

நீண்ட காலத்திற்கு அதிகமான வருமானங்களை ஈர்க்கக்கூடிய முதலீடுகளை எதிர்பார்ப்பவர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம். தெளிவான ஆலோசனை பெற்று இந்த முதலீட்டை எடுப்பது முக்கியம். சந்தை நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த முதலீட்டை எடுக்கலாம்.

ஃபிக்சட் டெபாசிட்:

ஃபிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதி அனைவருக்குமான ஒரு பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். முதன்முறையாக முதலீடு செய்பவர்கள் நிச்சயம் ஃபிக்சட் டெபாசிட் செய்வது அவசியம் அதோடு அதற்கான சரியான கால அளவைத் தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment