Advertisment

எஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன?

SBI Multi-Option Deposit Scheme : ஃபிக்ஸட் டெபாசிட் என்பது உத்தரவாதத் தொகையைப் பெறும் வங்கிகள் வழங்கும் பாதுகாப்பான நிதி கருவியாகும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI

SBI News In Tamil, SBI Chennai News, SBI Online, SBI Online Fraud, SBI Netbanking, State Bank of India, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி இணையதளம்

SBI Multi-Option Deposit Scheme : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மல்டி ஆப்ஷன் டெபாஸிட் திட்டம் (MODS), ஃபிக்ஸட் டேபாசிட் (FD) அல்லது கால ஃபிக்ஸட் டெபாசிட் வகை, ஒரு தனிநபரின் சேமிப்பு அல்லது நடப்பு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் என்பது உத்தரவாதத் தொகையைப் பெறும் வங்கிகள் வழங்கும் பாதுகாப்பான நிதி கருவியாகும்.

Advertisment

பிற சாதாரண ஃபிக்ஸட் டெபாஸிட்களை போல் இல்லாமல், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு 1000 ரூபாய்களை வேண்டுமானால் MODS கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்.பி.ஐ இணையத்தளமே கூறுகிறது.

SBI Multi-Option Deposit Scheme : எஸ்.பி.ஐ-ன் MODS முக்கியத்துவங்கள் என்னென்ன?

அதிகமான/குறைந்தபட்ச முதலீடு

MOD உருவாக்குவதற்கு தேவையான குறைந்தபட்ச கால அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட் தொகை ரூ. 10,000. இருப்பினும், MOD உருவாக்கத்திற்கான அதிகபட்ச கால வைப்புத் தொகைக்கான வரம்பு எதுவும் இல்லை.

காலம்

எஸ்.பி.ஐ யின் இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச காலம் ஒரு வருடம் மற்றும் அதிகபட்ச காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட்டில் எவ்வளவு வட்டி கட்டணம் உள்ளதோ, அதே கட்டணம் தான் MODS கணக்கிலும் பின்பற்றப்பட்டது. ஆனால் சில்லறை வைப்பு நிதிகள் மீதான வட்டி விகிதங்களை திருத்தி நவம்பர் 28ம் தேதி 2018ம் ஆண்டு முதல் எஸ்.பி.ஐ நடைமுறைப்படுத்தியது.

 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment