Advertisment

SBI Alert : இந்த டோல்ஃபிரீ எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க; ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனே பெறுங்க!

எஸ்பிஐ ஏடிஎம் PIN நம்பரை உருவாக்குவதற்கு IVR அழைப்பு சேவை மூலமாக மிகச் சுலபமாக உருவாக்கும் வசதியை எஸ்பிஐ ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
SBI bank tamil news sbi multi-option deposit scheme

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஏடிஎம் PIN நம்பரை உருவாக்குவதற்கு IVR அழைப்பு சேவை மூலமாக மிகச் சுலபமாக உருவாக்கும் வசதியை எஸ்பிஐ ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐயின் இந்த சேவை குறித்து பார்க்கலாம்.

Advertisment

பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைக்கவும். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு சேவைகளுக்கு எண் 2-ஐ அழுத்தவும்.

PIN நம்பரை உருவாக்குவதற்கு எண் 1-ஐ அழுத்தவும். நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து பேசினால் 1-ஐ அழுத்த வேண்டும். வேறு எண்ணிலிருந்து அழைத்தால் 2-ஐ அழுத்த வேண்டும்.

இப்போது உங்களது ஏடிஎம் கார்டில் கடைசி ஐந்து இலக்க எண்களைப் பதிவிட வேண்டும். அதன் பின்னர் 1-ஐ அழுத்தவும்.

மீண்டும் 2-ஐ அழுத்தி ஏடிஎம் கடைசி ஐந்து இலக்க எண்களைப் பதிவிட்டு உறுதி செய்யவும்.

வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களைப் பதிவிட்டு 1-ஐ அழுத்தி மீண்டும் உறுதி செய்யவும். மீண்டும் 2-ஐ அழுத்தி வங்கிக் கணக்கின் கடைசி 5 இலக்கங்களை மறுபடியும் பதிவிடவும்.

அடுத்ததாக உங்களது பிறந்த தேதியைப் பதிவிட வேண்டியிருக்கும். இப்போது உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கிரீன் PIN உருவாக்கப்பட்டிருக்கும்.

எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்குச் சென்று உங்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட PIN நம்பரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Atm Debit Sbi Customer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment