Advertisment

SBI News: நயா பைசா கட்ட வேண்டாம்; ரூ2 லட்சம் இலவச இன்சூரன்ஸ்: எப்படின்னு பாருங்க!

SBI offers free insurance upto Rs 2 lakhs: எஸ்பிஐ வழங்கும் பிரீமியம் இல்லா இன்ஸ்சூரன்ஸ்; ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற தகுதிகள் என்னென்ன? முழுவிவரம் இதோ...

author-image
WebDesk
New Update
மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும், இ-ஷ்ரம் திட்டம் பற்றி தெரியுமா?

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டை இலவசமாக வழங்குகிறது. ஆகஸ்ட் 28, 2018க்கு முன் கணக்கு தொடங்கிய எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி இந்தக் காப்பீட்டைப் பெறலாம்.

Advertisment

மேலும், ஆகஸ்ட் 28, 2018க்குப் பிறகு தங்கள் ஜன்தன் கணக்குகளைத் தொடங்கிய வாடிக்கையாளர்களும் இந்தக் காப்பீட்டுப் பலன்களைப் பெறலாம். இருப்பினும், பலன்களைப் பெறுவதற்கான மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, காப்பீட்டாளர் ‘SBI RuPay ஜன் தன் கார்டு’க்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

புதிய வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்கைத் திறப்பதன் மூலம் காப்பீட்டை இலவசமாகப் பெற முடியாது. இந்தியாவிற்கு வெளியே கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் நாமினிக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட, பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) நாட்டில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு கிடைப்பது, தேவை அடிப்படையிலான கடன், பணம் அனுப்பும் வசதி, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல வங்கி வசதிகளை பின் தங்கிய பிரிவினர் அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கிய வாடிக்கையாளர்கள் காப்பீட்டைப் பெறுவதற்கு எந்த நிதியையும் டெபாசிட் செய்யத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியது ஒரு ரூபே டெபிட் கார்டு-ஐ வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வங்கி பல நன்மைகளை வழங்குகிறது.

இலவச பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, ரூபே ஜன்தன் கார்டு வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளரின் இறப்புச் சான்றிதழின் நகலை இணைத்து க்ளைம் படிவத்தை நாமினி நிரப்ப வேண்டும்.

காப்பீட்டுத் தொகையைப் பெறும்போது தேவைப்படும் மற்ற ஆவணங்களில் விபத்து தொடர்பான எஃப்ஐஆரின் நகல், பிரேதப் பரிசோதனை அறிக்கை, எஃப்எஸ்எல் அறிக்கை மற்றும் இறந்த நபரின் ஆதார் அட்டையின் நகல் ஆகியவை அடங்கும். விபத்து நடந்த 90 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையைப் பெற நாமினி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sbi Sbi Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment