Advertisment

வீட்டு கடன் வாங்க நினைக்கிறீர்களா? எஸ்பிஐ வழங்கும் சூப்பர் ஆஃபர் உங்களுக்குத்தான்!

வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களுடன் இணைந்த எஸ்பிஐ; இனி எல்லோருக்கும் வீட்டுக் கடன் எளிதாக கிடைக்கும்

author-image
WebDesk
New Update
வீட்டு கடன் வாங்க நினைக்கிறீர்களா? எஸ்பிஐ வழங்கும் சூப்பர் ஆஃபர் உங்களுக்குத்தான்!

SBI offers home loans with HFCs to undeserved people: சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. நீங்கள் இதுவரை கடன் வாங்கியிருக்காவிட்டாலும், அல்லது உங்களிடம் கடன் பெற தேவையான தகுதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும், இனி கவலையில்லை. எஸ்பிஐ வழங்கும் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கலாம்.

Advertisment

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), குறைந்த தகுதிகளைக் கொண்ட மற்றும் இதுவரை கடன் பெறாத கடன் வாங்குபவர்களுக்கு சேவை செய்வதற்காக ஐந்து வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுடன் இணைக் கடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஐந்து வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCக்கள்): PNB ஹவுசிங் ஃபைனான்ஸ், IIFL ஹோம் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ், எடெல்வீஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், மற்றும் கேப்ரி குளோபல் ஹவுசிங் ஃபைனான்ஸ்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இதுவரை கடன் வழங்கப்படாத மற்றும் குறைந்த தகுதிகளை உடையவர்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மலிவு விலை வீடுகள் பற்றாக்குறை இந்தியாவிற்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) மற்றும் சமூகத்தின் முறைசாரா பிரிவுகளுக்கு, என SBI தெரிவித்துள்ளது.

எனவே இந்த பிரிவுகளுக்கு கடன் வழங்குவதை மேலும் மேம்படுத்த, SBI பல HFCகளுடன் இணை-கடன் வாய்ப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறது.

"இந்த ஒத்துழைப்பு எங்கள் கடன் வழங்கும் சேவையை மேம்படுத்தும், ஏனெனில் இதுவரை கடன் பெறாத மற்றும் குறைந்த தகுதி உடைய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எங்கள் கடன் வரம்பை விரிவுபடுத்துகிறோம். இந்தியாவில் உள்ள சிறிய வீடு வாங்குபவர்களுக்கு பயனுள்ள மற்றும் மலிவு கடன்களை விரைவுபடுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் இத்தகைய கூட்டாண்மைகள் ஒத்துப்போகின்றன" என்று SBI தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கல்வி கடன் வாங்க போறீங்களா? இந்த 8 விஷயங்கள் ரொம்ப முக்கியம்!

மேலும், 2024ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த ஒப்பந்தங்கள் பங்களிக்கும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் HFCகள்/NBFCகள் ஆகியவற்றுக்கான இணைக் கடன் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது, இது இதுவரை கடன் பெறாதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கடன் வழங்குவதை மேம்படுத்தவும் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு மலிவு விலையில் நிதி கிடைக்கச் செய்யவும் வழிவகை செய்கிறது.

இணை-கடன் திட்டமானது, கடன் வாங்குபவருக்கு சிறந்த வட்டி விகிதத்தையும், சிறந்த அணுகலையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தநிலையில், மேற்கண்ட வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், எஸ்பிஐ-ன் இந்த இணை கடன் திட்டத்தை வரவேற்றுள்ளன. மேலும் எஸ்பிஐ உடன் இணைந்து சேவை செய்வதை பெருமையாக கருதுகின்றன. மேலும் இது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் வீடு கட்டும் திட்டத்தை நனவாக்க கூடிய திட்டம் என்றும் தெரிவித்துள்ளன.

எனவே, தகுதியுள்ளவர்கள் எஸ்பிஐ-ன் இந்த இணை கடன் திட்டம் மூலம், வீட்டு கடன் பெற்று, உங்கள் சொந்த வீடு கனவை நனவாக்குங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sbi Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment