Advertisment

SBI Loan: வீடு கட்ட ரூ. 50 லட்சம் வரை கடன்; வட்டி விகிதம் இதுதான்!

18 வயது பூர்த்தி அடைந்த நபர் இந்த கடனை பெற தகுதியுள்ளவர். ஆனால் எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும். 36 மாதங்களில் இ.எம்.ஐ. நகைக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று லிக்விட் கோல்ட் லோனை 36 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். புல்லெட் ரீபேமெண்ட் கோல்ட் லோனை 12 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். ரியல்ட்டி கோல்ட் லோனின் அனைத்து வகைகளுக்கும் வட்டியானது ஒரு வருட MCLRக்கு 7 சதவீதம், ஒரு வருட MCLR க்கு 0.30 சதவீதம் மற்றும் பயனுள்ள வட்டி விகிதம் 7.30 சதவீதம் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விருப்பமா? அப்போ இந்த 5 விஷயத்துல கவனமா இருங்க!

gold loan scheme for financing your dream house: உங்களின் கனவு இல்லத்தை கட்டி முடிக்க கையில் இருக்கும் நிதி போதவில்லையா? எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் இனி அந்த கவலை ல்லை. ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் என்ற திட்டம் உங்களின் கவலையை தீர்த்து கனவு இல்லத்தை கட்ட வழி வகுக்கிறது.

Advertisment

இது குறித்து தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்த எஸ்.பி.ஐ., உங்களின் கனவு இல்லத்தை கட்ட போதுமான நிதி இல்லை என்றால் இந்த திட்டம் மிகவும் விரைவாகவும், கவலைகள் ஏதுமின்றியும் உங்களுக்கு உடனே கடன் கிடைக்க வழி செய்யும்” என்று கூறியுள்ளது.

லோனின் சிறப்பம்சங்கள் என்ன?

ஒருவர் குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை கடனை பெற முடியும்.

SBI Realty EMI தங்கக் கடன்: 25 சதவீதம்

SBI Realty Liquid Gold Loan (Overdraft): 25 சதவீதம்

SBI Realty Bullet Repayment Gold Loan: 35 சதவீதம்

பாதுகாப்பிற்காக, தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் தரம் குறித்து முறையாகச் சரிபார்க்கப்படும்

மொத்த கடன் மதிப்பில் 0.50% ப்ரோசசிங் ஃபீஸ் வசூலிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கு MCLR ஐ விட 0.30 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்

18 வயது பூர்த்தி அடைந்த நபர் இந்த கடனை பெற தகுதியுள்ளவர். ஆனால் எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.

36 மாதங்களில் இ.எம்.ஐ. நகைக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று லிக்விட் கோல்ட் லோனை 36 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். புல்லெட் ரீபேமெண்ட் கோல்ட் லோனை 12 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

ரியல்ட்டி கோல்ட் லோனின் அனைத்து வகைகளுக்கும் வட்டியானது ஒரு வருட MCLRக்கு 7 சதவீதம், ஒரு வருட MCLR க்கு 0.30 சதவீதம் மற்றும் பயனுள்ள வட்டி விகிதம் 7.30 சதவீதம் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

Sbi Housing Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment