எஸ்பிஐ உங்களிடம் அடிக்கடி கட்டணம் வசூலிக்க இதுதான் காரணம்!

எஸ்பிஐ வசூலிக்கும் கட்டண விவரம்.

By: Updated: April 12, 2019, 02:20:35 PM

sbi online banking login : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இணையதள வங்கி சேவை மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் கட்டணங்களை வசூலிக்கிறது. இந்தக் கட்டணங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவீதத்தையும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. எனவே இந்தப் பரிவர்தனை சேவைகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இங்கு பார்ப்போம்.

NEFT

எஸ்பிஐ வங்கியில் 10,000 ரூபாய் வரை NEFT பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 10,001 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 2 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 3 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 2 லட்சத்திற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது கூடுதலாக 5 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எச்டிஎப்சி கிரேடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு பில் இப்படி தான் வரும்!

IMPS

IMPS பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய் வரை எந்தக் கட்டணமும் இல்லை. 1001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை செய்ய 15 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

RTGS
ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை RTGS பரிவர்த்தனை செய்யும்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பரிவர்த்தனையைச் செய்யும்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்ப்டுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi online banking login process

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X