Advertisment

நீங்க அலைய வேண்டிய அவசியமே இல்லை... இனி செக் புக், ஏடிஎம் கார்டு எல்லாமே வீடு தேடி வரும்!

கணக்கு அறிக்கைக்கான கோரிக்கை போன்ற சேவைகள் மட்டும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi account state bank sbi account state bank

sbi account state bank sbi account state bank

sbi passbook state bank passbook state bank of india passbook: பொதுத்துறை வங்கிகளின் வீடு தேடி வரும் வங்கி சேவை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Advertisment

தற்போதைய நவீன உலகில் வீட்டு உபயோக பொருட்கள், செல்போன்கள், உணவுகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை வீட்டிற்கு வந்து கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த நவீன உலகில் மக்களுக்கு மிகவும் முக்கியமான சேவையாக வங்கி சேவை பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொலைபேசி, இணையம் மற்றும் செல்போன் ஆப் வழியாக அணுகினால், பொதுத்துறை வங்கிகளின் வீடு தேடி வரும் வங்கி சேவை புழகத்திற்கு வந்து விட்டது.

ஏறக்குறைய 50 சதவீத வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படும் சூழலில், வங்கி சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக வீடு தேடி வரும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் .

இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பெயரளவு கட்டணத்தில் வீட்டில் இருந்தபடியே வங்கி சேவைகளைப் பெற முடியும். தற்போது, ​​இந்த சேவை நாட்டின் 100 நகரங்களில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. புதிய காசோலை புத்தக கோரிக்கை சீட்டு, நிலையான வழிமுறைகளுக்கான கோரிக்கை, கணக்கு அறிக்கைக்கான கோரிக்கை போன்ற சேவைகள் மட்டும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதல் நிதி சேவைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) சில ஆண்டுகளுக்கு முன்பு Door Step Banking சேவைக்கு அடித்தளம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment