Advertisment

வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விரைவில் வட்டி விகிதங்கள் உயர்வு

வங்கிகளில் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களா? வட்டி விகிதங்கள் உயரப்போகின்றன. எப்போது தெரியுமா?

author-image
WebDesk
New Update
வட்டி விகிதங்களை மாற்றிய முக்கிய வங்கி; விவரங்கள் இதோ…

Planning Fixed Deposit? SBI Research says interest rate increase possible. Here’s when: விரைவில், வங்கி டெபாசிட் விகிதங்கள் உயர பெரும் அழுத்தம் ஏற்படலாம். SBI ஆராய்ச்சியின் படி, 2022-2023 நிதியாண்டில் குறிப்பிட்ட எண்கள் பலனளிக்கும் பட்சத்தில் வங்கி வைப்பு விகிதங்கள் அதிகரிக்க அதிக அழுத்தம் இருக்கும்.

Advertisment

"FY22 இல், சிறு சேமிப்பு வசூல் பட்ஜெட் தொகையை விட பெரிய ரூ. 2 லட்சம் கோடிகளை தாண்டியது, இதன் விளைவாக நிகர கடன் ரூ. 1.7 லட்சம் கோடி குறைந்துள்ளது. சவால் FY23 இல் உள்ளது, நிகர கடன்கள் ரூ. 4.1 லட்சம் கோடிகள் அதிகரித்து, சிறு சேமிப்புகள் திருத்தப்பட்ட FY22 தொகையை விட ரூ. 1.7 லட்சம் கோடி குறைவாக இருக்கும். FY23 இல் இந்த எண்கள் பலனளிக்கும் பட்சத்தில், வங்கி வைப்பு விகிதங்களை விட சிறு சேமிப்பு விகிதங்கள் ஏற்கனவே அதிகமாக இருப்பதால் வங்கி வைப்பு விகிதங்கள் அதிகரிக்க பெரிய அழுத்தங்கள் இருக்கும்,” என்று எஸ்பிஐ ரிசர்ச் இன்று (திங்கட்கிழமை, 7 பிப்ரவரி 2022) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

publive-image

FY21ன் முதல் காலாண்டு முதல் சிறு சேமிப்புத் திட்டங்களின் விகிதங்களை மத்திய அரசு திருத்தவில்லை. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முக்கிய பாலிசி ரெப்போ விகிதத்தை 115 பிபிஎஸ் முதல் 4.0 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை 155 பிபிஎஸ் முதல் 3.35 சதவீதமாகவும் குறைத்துள்ளது. இதன் மூலம், வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களை (டெபாசிட் மற்றும் கடன் வழங்குதல்) கணிசமாகக் குறைத்துள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டது.

மார்ச் 2020 முதல் டிசம்பர் 2021 வரை வங்கிகளின் சராசரி கடன் விகிதங்கள் 99 பிபிஎஸ் குறைந்துள்ளது மற்றும் சராசரி உள்நாட்டு டெபாசிட் விகிதங்கள் 132 பிபிஎஸ் குறைந்துள்ளன.

சமீபத்தில், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் போன்ற வங்கிகள் பல தவணைக் காலங்களுக்கான நிலையான வைப்பு விகிதங்களை உயர்த்தியுள்ளன.

அறிக்கையின்படி, தற்போது அதிகரித்து வரும் கிரெடிட் டெபாசிட் விகிதம் 140 ஆக உள்ளது, இது வங்கி வைப்புகளின் அடிப்படையில் அதிக நீடித்த பணப்புழக்கத்தைப் பெற வைப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதைக் குறிக்கிறது. "டெபாசிட் விகிதங்களை உயர்த்துவதில் தாமதம் ஏற்படுவதால், பிற்காலத்தில் பெரிய அளவில் அதிகரிக்கும்" என்று அது கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Business Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment