Advertisment

இதுதான் சரியான டைம்.. எஸ்பிஐ லோன் வாங்கினால் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும்!

எஸ்பிஐ 6.90% வட்டி விகிதத்தில் ரூ 30 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Lic policy scheme lic apply lic

Lic policy scheme lic apply lic

sbi state bank state bank of india loan : நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போதைய பண்டிகை காலத்தின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு 0.25% சலுகை அறிவித்துள்ளது.

Advertisment

75 லட்சத்துக்கும் அதிகமான கடன்களுக்கு 0.20% வரை வட்டி சலுகை மற்றும் கடன் வாங்கியவரின் சிபில் மதிப்பெண் மற்றும் அதன் யோனோ மொபைல் பயன்பாட்டின் மூலம் விண்ணப்பிக்கப்படும் அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் கூடுதலாக 0.05% சலுகை ஆகியவற்றை வழங்குவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது .

இதே சலுகை எட்டு மெட்ரோ நகரங்களில் ரூ 3 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கும் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். ரூ 30 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் ரூ 75 லட்சத்துக்கும் குறைவான வீட்டுக் கடன்களுக்கு, வாடிக்கையாளர்களின் வட்டி விகிதத்தில் 0.10% வரை சலுகை பெறலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பெண் கடன் வாங்குபவர்களுக்கு மேலேயுள்ள சலுகையின் மேல் கூடுதலாக 0.05% வட்டி சலுகை கிடைக்கும்.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தற்போது எஸ்பிஐ 6.90% வட்டி விகிதத்தில் ரூ 30 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

சில்லறை வாடிக்கையாளர்கள் கார் கடனில் 7.5% முதல் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர். தங்கக் கடன் மற்றும் தனிநபர் கடன் வாடிக்கையாளர்கள் இந்த பண்டிகை காலங்களில் முறையே 7.5% மற்றும் 9.6% என குறைந்த வட்டி விகிதங்களின் நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ மூலம் முன் ஒப்புதல் வழங்கப்பட்ட இன்ஸ்டா ஹோம் டாப்-அப் கடன்களையும் பெறலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment