Advertisment

சொந்த வீடு கனவுக்கு இதைவிட சிறந்த தருணம் இல்லை: எஸ்பிஐ சலுகை இந்த மாதம் மட்டும்தான்!

State Bank of India home loans tamil news: வீட்டுக் கடன் வழங்குவதில் எஸ்பிஐ வங்கி, சந்தையில் 34% பங்கையும், ரூ .5 லட்சம் கோடிக்கும் அதிகமான போர்ட்ஃபோலியோவையும் கொண்டுள்ளது, இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்றும் நம்புகிறது.

author-image
WebDesk
New Update
Business news in tamil State Bank of India home loans now at 6.7%

SBI BANK Tamil News:  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி வீட்டுக் கடன் வழங்க, அடிப்படை விகித புள்ளிகளை 10 லிருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31 வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisment

"வட்டி சலுகை கடன் தொகை மற்றும் கடன் வாங்கியவரின் சிபில் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். நல்ல திருப்பிச் செலுத்தும் வரலாற்றைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதே இதன் யோசனை. கடன் வழங்குபவர் செயலாக்கக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வார்" என்று கடன் வழங்குபவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் கடன் வழங்குவதில் எஸ்பிஐ வங்கி சந்தையில் 34% பங்கையும், ரூ .5 லட்சம் கோடிக்கும் அதிகமான போர்ட்ஃபோலியோவையும் கொண்டுள்ளது, இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்றும் நம்புகிறது.

ஒரு வங்கி அதன் கணக்கிலிருந்து 23% வீட்டுக் கடன் வழங்குவது மிகப் பெரிய பங்கு ஆகும். எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா முன்னதாக, '2023-24 ஆம் ஆண்டில் வங்கி தனது வீட்டுக் கடன் இலாகா ரூ .7 லட்சம் கோடியைத் எட்டும் என்று எதிர்பார்க்கிறது. இளைஞர்களிடையே  சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. மற்றும் அவர்களின் உயரும் வருமானம் மற்றும் அரசாங்க கொள்கைகள் முத்திரை வரி மற்றும் மானியத்தில் சலுகை இவை வீட்டு கடன் வழங்க கை கொடுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

publive-image

 

 

வங்கியின் வாடிக்கையாளர்கள் வெளிப்படைத்தன்மையை பாராட்டியதாக கூறியுள்ள எஸ்பிஐ, டிஎம்டி (சில்லறை வணிகம்) சலோனி நாராயண்,  "குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் எவரும் விரும்பும் வீட்டுக் கடன்களில் சிறந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும்" என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த பிரிவில் எஸ்பிஐயின் மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரான அடமான கடன் வழங்குநர் எச்.டி.எஃப்.சி வங்கி 6.8% முதல் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (ஏயூஎம்) கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, அது விற்ற கடன்களை தள்ளுபடி செய்யாமல் ரூ .55.52 லட்சம் கோடியாக இருந்தது. கோடக் மஹிந்திரா வங்கி இப்போது 6.65 சதவிதம் முதலும் , ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன்கள் வழங்குவதில் 6.8% முதலும் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வலைத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எல்..சி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகியவை முறையே 6.9% வீட்டுக் கடன்களுக்காக வசூலிக்கின்றன.

ஜே.பி. மோர்கன் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் எஸ்பிஐக்கு சில்லறை இழுவை வலுவாக இருப்பதாக நம்புகின்றனர். "2019 நிதியாண்டில் கடன் செலவுகள் மற்றும் இயக்க செலவுகளின் பெரும்பகுதியுடன், எஸ்பிஐ  2021 நிதியாண்டில் இருந்து இயல்பாக்கப்பட்ட இலாபத்திற்கு திரும்பத் தொடங்க வேண்டும். எங்கள் பார்வையில்,  0.7 முதல் 0.9%  வரை வங்கியின் சொத்துக்களின் இலக்கு வருவாய் 2021-2022 நிதியாண்டில்  (ROA) எட்ட வேண்டும்என்று ஜே.பி. மோர்கன்  நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

"எஸ்பிஐயின் மூலோபாயம் அதன் இயக்க லாபத்தை ஆபத்து-அளவீடு செய்யப்பட்ட முறையில் மேம்படுத்துவதன் மூலமும், அதன் வைப்பு உரிமையில் கவனம் செலுத்துவதன் மூலமும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறந்த தளத்தை வழங்க நினைக்கிறது" நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Business Sbi Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment