Advertisment

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே... ஜன.1 முதல் இது செயல்படாது - எச்சரிக்கையா இருங்க!

SBI OTP Transactions : எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளில் நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்யும் போது, otp இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI to launch OTP-based cash withdrawal ATMs from January 1, 2020 - எஸ்பிஐ வாடிக்கையாளர்களே... ஜன.1 முதல் இது செயல்படாது - எச்சரிக்கையா இருங்க!

SBI to launch OTP-based cash withdrawal ATMs from January 1, 2020 - எஸ்பிஐ வாடிக்கையாளர்களே... ஜன.1 முதல் இது செயல்படாது - எச்சரிக்கையா இருங்க!

SBI launches OTP Based ATM Transactions: எஸ்பிஐ வங்கி, ஜனவரி 1 முதல் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது, முறைகேட்டில் யாரும் ஈடுபடாத வண்ணம், One Time Password எனும் ஓடிபி முறையை கொண்டு வர உள்ளது. இந்த ஓடிபி முறையானது ஜனவரி 1, 2020ல் இருந்து நடைமுறையில் இருக்கும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த திட்டமானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும்.

Advertisment

இந்த ஓடிபி திட்டமானது எஸ்பிஐயின் அனைத்து ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறையானது அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளில் இருந்து உங்களைப் பாதுக்காக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஓடிபி முறையிலான பணம் பெறும் வசதியானது 10,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் போது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

சிறந்த சலுகைகள் தரும் எஸ்பிஐ - இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே

வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் பட்சத்தில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளில் நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்யும் போது, otp இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நீங்கள் பெற விரும்பும் தொகையை பதிவு செய்த பின், ஏடிஎம் திரையில் ஓடிபி என்ற ஆப்ஷன் கேட்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை பதிவிட்ட பின்னரே உங்களது பரிவர்த்தனை முடிவடையும். இந்த முறையானது சற்றே வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகிறது.

கட்டணம் ரத்து - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்

அதேபோல், எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட கார்டுகளாக இருந்தால் அது டிசம்பர் 31 வரையில் தான் அந்த கார்டுகள் செல்லும். இந்த வகையான மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

உங்களது பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டை தவிர்த்து, கூடுதல் பாதுகாப்பிற்காக இஎம்வி சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வங்கியில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். இஎம்வி சிப் இல்லாத பழைய டெபிட் கார்டுகளை டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகவும், ஜனவரி 1 லிருந்து புதிய ஏடிஎம் கார்டுகள் தான் செல்லும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment