Advertisment

இந்தக் கட்டணம் இனி இல்லை... எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் ஹாப்பி அண்ணாச்சி!

மொபைல் பணப் பரிமாற்றங்களில் எஸ்எம்எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
SBI reduces interest rates on deposits

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மொபைல் நிதி பரிமாற்றத்திற்கான எஸ்எம்எஸ் கட்டணம் இனி பொருந்தாது என்று அறிவித்துள்ளது. இதனால், இப்போது கூடுதல் கட்டணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் வசதியாக பரிவர்த்தனை செய்யலாம்.

Advertisment

இது குறித்து எஸ்.பி.ஐ ட்விட்டரில், “மொபைல் பணப் பரிமாற்றங்களில் எஸ்எம்எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பயனர்கள் இப்போது USSD சேவைகளைப் பயன்படுத்தி எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வசதியாக பரிவர்த்தனை செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USSD என்றால் என்ன

Unstructured Supplementary Service Data என்பது SMS அம்சத்தைக் கொண்ட அனைத்து மொபைல் சாதனங்களிலும் அணுகக்கூடிய தொழில்நுட்பமாகும்.

ஃபீச்சர் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, USSD மிகவும் பயனுள்ள அம்சமாகும். நாட்டில் 65% மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தச் சேவையைப் பெற, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் *99# என்பதை டயல் செய்தால் போதும். சேவை முற்றிலும் இலவசம்.

USSDக்கான பதிவு செயல்முறை

  1. SBI வாடிக்கையாளர்கள் இந்த 9223440000 என்ற எண்ணுக்கு HI (ஹாய்) அனுப்ப வேண்டும். பயனர் ஐடி மற்றும் இயல்புநிலை MPIN விரைவில் அனுப்பப்படும்.
  2. ஏற்கனவே உள்ள MPIN ஐ மாற்ற *595# என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும்.
  3. ஏடிஎம், வங்கி அலுவலகம், இணைய வங்கி வசதியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏ.டி.எம்.மில் பதிவு செய்ய

அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று டெபிட் கார்ட்-ஐ ஸ்விப் செய்யும். பின்னர் mobile registration > mobile banking > Registration > என்பதை தேர்வு செய்து, மொபைல் போன் நம்பரை கொடுத்து உறுதி செய்துக் கொள்ளவும்.

இண்டர்நெட் பேங்கிங்

எஸ்.பி.ஐ., கணக்கை லாக்இன் செய்யவும். பின்னர் eServices > State Bank Freedom from the list on the left side > Registration > Enter User ID and mobile number > Select the account (only SB/ CA) to be enabled > ஆகியவற்றை தேர்வு செய்து ஒகே கொடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Sbi Bank Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment