Advertisment

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்

Bank strike:புதன்கிழமை ஏ.டி.எம் மில் நிரப்பப்பட்ட பணம் வெள்ளிகிழமை வரை தாக்குபிடிக்காது.சென்னையில் உள்ள 2000 க்கும் மேற்ப்பட்ட  ஏ.டி.எம் கள் வரண்டுத் தான் கிடக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bank officer Strike - Atm Cash Crunch in Sep 26 27

Bank officer Strike - Atm Cash Crunch in Sep 26 27

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான ஏ.டி.எம் களில் வரும் வியாழன், மற்றும் வெள்ளி இரண்டு நாட்களில் அதிகமான  பணப் பற்றக்குறை ஏற்படப் போகிறது. பொது மக்கள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்திய நாட்டின் முதுகெலும்பாய் இருப்பது பொதுத் துறை வங்கிகள். ஆனால், சமிப காலங்களில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் தங்கள் கொடுத்த கடன்கள் எல்லாம் வாராக்கடனாய் மாறின.  இந்த சூழ் நிலையை கட்டுப்படுத்த இந்திய அரசு இந்தியாவில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடு ஒன்றிணைத்து 12 வங்கிகளாக  மாற்றின.

ஆனால், இந்த அறிவிப்பு வங்கி ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்பால், வரும் காலங்களில் தங்கள் வேலை பறிபோகும் என்றும், புது  வங்கி ஊழியர்களின் சேர்க்கும் வீதமும் குறைக்கப்படும் என்று தெரிவித்து வந்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வரும் 26,27 அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதில் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால் 26,27 களில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது, மாறாக வங்கி ஊழியர்கள் வங்கிப் பணிகளுக்கு வர மாட்டார்கள்.

இதனால், சாதாரண மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் என்று  பொருளாதார  வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். உதரணமாக, ஆயிர்க்கனக்கான அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் . பொதுவாக, ஒரு ஏ.டி.எம் மில் பணம் நிரப்பப் பட வேண்டும் என்றால், உயர் அதிகாரியின் மேற்பார்வை தேவை. எனவே, வரும் வியாழன், வெள்ளி நாட்களில் ஏ.டி.எம் மில் பணம் நிரப்ப முடியாது. புதன்கிழமை ஏ.டி.எம் மில் நிரப்பப்பட்ட பணம் வெள்ளிகிழமை வரை தாக்குபிடிக்க முடியாது. மேலும், சனி மற்றும் ஞாயிறு பொது விடுமுறை யாய் இருப்பதால் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பவர்களுக்கு மிக பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப் படுகிறது . எனவே, இந்த நாட்களில் சென்னையில் உள்ள 2000 க்கும் மேற்ப்பட்ட  ஏ.டி.எம் கள் வரண்டுத் தான் கிடக்கும்" என்றி தெரிவித்துள்ளார்.

Strike Atm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment