சேதாரம் இல்லாத வருமானம்: டிஜிட்டல் தங்கம் முதலீடு ஏன் பெஸ்ட்னு பாருங்க!

தங்க நகைகளை விற்கும்போது, ​​நீங்கள் பெறும் இறுதித் தொகை நீங்கள் அந்த நகையை வாங்கிய விலையை விட மிகக் குறைவாக இருக்கும்.

Business News in Tamil : தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் முறையில் சம்பாதிக்க பல தொழில் வல்லுநர்கள் புதிதாக இணைந்து வருகின்றனர். அவர்களின் முதலீடு மற்றும் தனிப்பட்ட நிதி தேவைகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகின்றன. பாரம்பரிய சொத்து முதலீட்டுகளை விட்டு இளம் தலைமுறையினர் விலகிச் செல்ல தொடங்கி உள்ளனர். மேலும், அவர்களின் முதலீட்டின் நீண்ட கால ஆதாயங்களை அறிந்துக் கொள்ள அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

டிஜிட்டல் சுவிஸ் கோல்ட் அண்ட் கில்டட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் ரிஸ்வி கூறுகையில், தங்கம் வரலாற்று ரீதியாக இந்தியர்களுக்கு ஒரு சிறந்த சேமிப்பு முதலீட்டு பொருளாக இருந்து வருகிறது. ஆனால், தங்கத்தை ஆபரணங்களாக வாங்குவது சேமிப்பக செலவுகள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பு கவலைகள் போன்ற கூடுதல் கட்டணங்களுடன் வருவதால்,குறிப்பிட்ட சதவீதத்தை நாம் இழக்க நேரிடுகிறது. அதேசமயம், டிஜிட்டல் முறையில் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குவது, சேமிப்பு மற்றும் விற்பனைப் போன்ற முழு செயல்முறையையும் எளிதாக்குகிறது. டிஜிட்டல் முறையில் வாங்கப்படும் தங்கத்தை தற்போதைய சந்தை விலையில் எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் :

தங்கத்தை ஆபரண நகைகளாக வாங்குவதால் செய்கூலி, சேதாரம், மற்றும் பாதுகாப்புக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டி இருப்பதால் நகைகள் மிகவும் விலை உயர்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஆனால், டிஜிட்டல் தங்கம் அந்தச் செலவுகளை உள்ளடக்கியது அல்ல. டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்வதும், உங்களுக்கு தேவைப்படும் போது உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதும் மிகவும் எளிதானதாக இருக்கிறது.

தங்க நகைகளை விற்கும்போது, ​​நீங்கள் பெறும் இறுதித் தொகை நீங்கள் அந்த நகையை வாங்கிய விலையை விட மிகக் குறைவாக இருக்கும். தங்கத்தை ஒரு வங்கியில் பாதுகாப்பான லாக்கரில் வைத்திருந்தால் சேமிப்பக செலவுகள் போன்ற கூடுதல் கட்டணங்களுடன் வருகிறது. ஆனால், டிஜிட்டல் தங்கம் இது போன்ற தொந்தரவில்லாதது. இது, விற்பானையாளர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் டிஜிட்டம் தங்கத்தை மறுவிற்பனை செய்யும் போது நீங்கள் முதலீடு செய்த தங்கத்தின் முழு மதிப்பையும் பெறுவீர்கள். மேலும் முழு செயல்முறைக்கும் எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு டிஜிட்டல் தங்க முதலீட்டிற்கான உத்திகள் :

தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வேலை இழப்புகள் மற்றும் சம்பள பிடித்தங்கள் மக்களிடையே நிதித் தேவைகளை மாற்றிவிட்டன, மேலும் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு வலுவான, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் இலாபகரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உருவாக்குவதை மக்கள் பார்க்கிறார்கள். தங்கத்தில் குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களைத் தவிர்ப்பதற்கு வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டுக்கான வழக்கமான நுகர்வு சிறந்ததாக அமையும்.

சுவிஸ் தங்கத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன?

விலைமதிப்பற்ற உலோகமான தங்கத்தை சேமிக்க ஒரு பாதுகாப்பான இடமாக ஸ்விஸ் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன தங்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் சொந்தமானது.

நாங்கள் அனைத்து தங்கத்தையும் சுவிஸ் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நேரடியாகப் பெறுவதாகவும், ஒவ்வொரு தங்க பட்டையும் நம்பகத்தன்மை மற்றும் தனித்துவமான வரிசை எண்ணின் முத்திரையைக் கொண்ட அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தங்கக் கம்பிகள் நம்பகத்தன்மையின் சான்றிதழ்கள் மற்றும் மொபைல் பயன்பாட்டில் காணக்கூடிய உரிமையாக தங்கப் பட்டியின் படம் உட்பட இந்த தகவல்கள் அனைத்தும் உள்ளன. என வங்கி ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர் சுவிஸ் வங்கியில் தங்கத்தை வாங்கியவுடன், இந்த விவரங்களை நாங்கள் அவருக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Should young professional buy digital gold to safeguard investments swiz gold

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com