Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்: ஒரே ஆண்டில் அதிக வட்டி தரும் வங்கிகள் இவை!

fixed deposit scheme: பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டியை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
savings account

நாம் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும்போது பணம் பாதுகாப்பாகவும் அதிக லாபம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒன்று வங்கி பிக்ஸட் டெபாசிட்தான். ஒன்று முதல் 2 வருடங்களுக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு சில வங்கிகள் அதிக வட்டியை வழங்குகின்றன. இது பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த வட்டி விகிதங்கள் 1 கோடி ரூபாய்க்கும் கீழாக டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். அதிக வட்டி தரும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் சிலவற்றை காணலாம்

Advertisment

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1-2 வருடங்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 7% ஆகும்.

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.75% ஆகும்.

டிசிபி வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.70% ஆகும்.

இதே இந்தஸ்இந்த் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.50% ஆகும். இது 1-2 வருட டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். யெஸ் வங்கியில் 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமாகும்.

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமாகும்.

இதே ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில், 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.40% வட்டி விகிதமாகும்.

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.35% வட்டி விகிதமாகும்.

ஆர்பிஎல் வங்கியில் 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி விகிதமாகும்.

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1-2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.20% வட்டி விகிதமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Fixed Deposits Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment