ஸோஹோ ஆபீஸ் பயன்பாட்டை கட்டாயமாக்கிய மத்திய அரசு: டேட்டா பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

மத்திய கல்வி அமைச்சகம், தனது அதிகாரிகள் அனைவரும் ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் ‘ஸோஹோ ஆபிஸ் சூட்’ (Zoho Office Suite)-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், தனது அதிகாரிகள் அனைவரும் ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் ‘ஸோஹோ ஆபிஸ் சூட்’ (Zoho Office Suite)-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Zoho Office becomes mandatory at Education Ministry

ஸோஹோ ஆபீஸ் பயன்பாட்டை கட்டாயமாக்கிய மத்திய கல்வி அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சகம் அதன் அனைத்து அதிகாரிகளும் ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் ‘ஸோஹோ ஆபிஸ் சூட்’ (Zoho Office Suite)-ஐப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொலைநோக்குப் பார்வை மற்றும் சுதேசி இயக்கத்தின் வழியில், டிஜிட்டல் இறையாண்மை மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.

Advertisment

“ஸோஹோ-வின் உள்நாட்டு அலுவலக உற்பத்தி திறனுக்கான கருவிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாங்க சுதேசி இயக்கத்தில் துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளோம். இதன் மூலம் இந்தியா உள்நாட்டுப் புத்தாக்கத்தின் மூலம் தலைமை தாங்கவும், டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தவும், தற்சார்புள்ள எதிர்காலத்திற்காக நமது தரவுகளைப் பாதுகாக்கவும் அதிகாரம் பெறுகிறது” என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

உயர்கல்வி துறையின் அதிகாரபூர்வ ஆணையின்படி, ஸோஹோ-வை ஏற்றுக்கொள்வது என்பது வெளிநாட்டு மென்பொருளை சார்ந்திருப்பதை குறைத்து, இந்திய டிஜிட்டல் தயாரிப்புகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கை ஆகும். இந்த மாற்றம் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவும், மேலும் நாட்டை "சேவைப் பொருளாதாரத்திலிருந்து ஒரு தயாரிப்பு நாடாக" மாற்ற உதவும் என்றும் அந்த சுற்றறிக்கை மேலும் கூறியது.

அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளும் மற்றும் பணியாளர்களும் அனைத்து உத்தியோகபூர்வ பைல்கள், spreadsheets மற்றும் presentations ஆகியவற்றை ஸோஹோ-வைப் பயன்படுத்தி உருவாக்கவும், திருத்தவும் மற்றும் பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸோஹோ தற்போது என்ஐசி மின்னஞ்சலுடன் (NIC mail) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஸோஹோ ஆபிஸ் சூட் (Zoho Office Suite) இது ஸோஹோ கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் அலுவலகத் தளமாகும். ஆவணங்களை உருவாக்க, திருத்த, மற்றும் பகிர இந்தத் தளம் உதவுகிறது. முக்கியக் கருவிகளாக ஆவணங்களுக்கு ஸோஹோ ரைட்டர் (Zoho Writer), ஸோஹோ ஷீட் (Zoho Sheet), மற்றும் ஸோஹோ ஷோ (Zoho Show) ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஸோஹோ வொர்க்டிரைவ் (Zoho WorkDrive) மூலம் கிளவுடில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன.

ஒருங்கிணைப்பு: அதிகாரிகள் ஸோஹோ-வின் கூட்டுப் பணிக் கருவிகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உதவிக்கு CMIS/NIC பிரிவைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். ஸோஹோ ஆபிஸ் சூட் ஏற்கனவே என்.ஐ.சி மின்னஞ்சல் அமைப்புக்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனி உள்நுழைவுகள் (logins) அல்லது நிறுவல்கள் இல்லாமல் தடையற்ற அணுகலை இது அனுமதிக்கிறது.

ஸோஹோவை முறையாக ஏற்றுக்கொள்வதன் மூலம், தரவுப் பாதுகாப்பு, உள்நாட்டுப் புத்தாக்கம், மற்றும் டிஜிட்டல் இடத்தில் மூலோபாய சுயாட்சி ஆகியவற்றில் அமைச்சகம் அதன் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. மென்பொருள் இறக்குமதிச் சார்புநிலையைக் குறைப்பதற்கான ஒரு "துணிச்சலான நடவடிக்கை" என்றும், பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் இறையாண்மை கொண்ட தகவல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகவும் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை விவரித்துள்ளனர். இந்த உத்தரவை இந்திய அரசின் துணைச் செயலாளரான நிஷாந்த் உபாத்யாயா அவர்கள் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்டு, கல்வி அமைச்சர், மாநில அமைச்சர்கள் (SM மற்றும் JC) ஆகியோரின் தனிச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: