Advertisment

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2வது சிப்காட் தொழிற்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

ஸ்ரீபெரும்புதூரில் அருகே வல்லம் வடகல்லில் சிப்காட் தொழிற்பூங்கா - II ஐ அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (சிஐஏஏஏ) இருந்து தமிழ்நாடு மாநில தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sriperumbudur, sipcot industrial park II, environmental clearance, ஸ்ரீபெரும்புதூர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, environmental clearance for sipcot industrial park II, tamil nadu, vallam vadagal

ஸ்ரீபெரும்புதூரில் அருகே வல்லம் வடகல்லில் சிப்காட் தொழிற்பூங்கா - II ஐ அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (சிஐஏஏஏ) இருந்து தமிழ்நாடு மாநில தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.

Advertisment

ஸ்ரீபெரும்புதூரில் அருகே வல்லம் வடகல் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா - IIஐ அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (சிஐஏஏஏ) இருந்து தமிழ்நாடு மாநில தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.

325.36 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இடத்தில் 360 கோடி டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த திட்டம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் என்று சிப்காட் அதிகாரிகல் கூறுகின்றனர். இந்த இடத்தில் ஆட்டோமொபைல் பாகங்கள், பொறியியல் மற்றும் ஃபேப்ரிகேஷன், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பிற தொழில்கள் முன்மொழியப்பட்டுள்ளது . இந்த பூங்காவில் மேம்பட்ட தொழில்துறை இடங்களுக்கு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடமிருந்து விசாரிப்புகள் வந்துள்ளன என்று சிப்காட் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முதல் தொழிற்பூங்காவில் 73 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள நிறுவனங்கள் 7,373 நபர்களுக்கு நேரடியாகவும், 4,260 க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் மற்றும் யமஹா மோட்டார் எலெக்ட்ரானிக்ஸ் இந்த பூங்காவிலிருந்து இயங்குகின்றன. சில நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் உள்ள மேனல்லூர், சூரபூண்டி கிராமங்களில் ஒரு தொழிற்பூங்காவை மேம்படுத்துவதற்காக சிப்காட் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது.

அதே போல, இந்த பகுதியில் ஒரு மின்சார வாகன உற்பத்தி பூங்கா இங்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை சிப்காட் 12 மாவட்டங்களில் 21 தொழில்துறை வளாகங்களையும், ஏழு துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் உருவாக்கியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment