Advertisment

எப்போதும் வாடிக்கையாளர்களிடம் இருந்து இதை கேட்பதில்லை; எச்சரிக்கை செய்யும் எஸ்.பி.ஐ.

State bank of india alerts customer for phishing attack, Don't give UPI PIN to anyone : உங்களுக்கு யாரேனும் பணம் வழங்குவதாக இருந்தால் அவர்களுக்கு உங்களின் யுபிஐ பின் தேவையில்லை, உங்களின் யுபிஐ பின்னை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது- எஸ்பிஐ

author-image
WebDesk
New Update
SBI new rules, SBI cash withdrawal

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இணைய வழி மோசடி குறித்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

Advertisment

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வென்றதாகவும், அதனைப் பெற உங்கள் பயனர்பெயர் மற்றும் UPI PIN ஐ உள்ளிடவும் கூறி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறதா? உஷார், உங்கள் பணம் இங்கே ஆபத்தில் இருக்கிறது. உங்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்யும் இந்த மின்னஞ்சல் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை உங்களிடமிருந்து பறிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் கணக்கு விவரங்களில் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக் கடன் வழங்குநரான எஸ்பிஐ, இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. எஸ்பிஐயின் அந்த ட்வீட்டில், "இலவச பரிசுகள் மற்றும் வெகுமதிகளை வழங்கும் மோசடி மின்னஞ்சல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஸ்கேமர்கள் இந்த மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். உங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எஸ்பிஐ உங்கள் யுபிஐ பின்னை ஒருபோதும் கேட்காது. எச்சரிக்கையாக இருங்கள் & #SafeWithSBI ". என பதிவிட்டுள்ளது.

"உங்களுக்கு யாரேனும் பணம் வழங்குவதாக இருந்தால் அவர்களுக்கு உங்களின் யுபிஐ பின் தேவையில்லை, உங்களின் யுபிஐ பின்னை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது" என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

'ஃபிஷிங்' என்பது இணைய திருட்டுக்கான பொதுவான வடிவம் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். வங்கி கணக்கு எண்கள், நிகர வங்கி கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள், தனிப்பட்ட அடையாள விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்ற ரகசிய நிதி தகவல்களை திருட இது பயன்படுகிறது.

குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை பறிமுதல் செய்யலாம் அல்லது பாதிக்கப்பட்டவரின் கிரெடிட் கார்டுகளில் பில்களை செலுத்தலாம். இது போன்ற அடையாள திருட்டுக்கு நீங்கள் பலியாகலாம்.

இந்த தாக்குதல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தனது வலைத்தளமான oninesbi.com இல் தெரிவித்துள்ளது.

  • இணைய வங்கி பயனர் ஒரு முறையான இணைய முகவரியிலிருந்து ஒரு மோசடி மின்னஞ்சலைப் பெறுகிறார்.
  • அஞ்சலில் வழங்கப்பட்ட ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்ய மின்னஞ்சல் பயனரை அழைக்கிறது.
  • பயனர் ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்து, உண்மையான இணைய வங்கி தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்.
  • வழக்கமாக, இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கான வெகுமதியை உறுதியளிக்கும் அல்லது உங்களுக்கு வரவிருக்கும் அபராதம் குறித்து எச்சரிக்கும்.
  • உள்நுழைவு அல்லது சுயவிவரம் அல்லது பரிவர்த்தனை கடவுச்சொற்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் போன்ற ரகசிய தகவல்களை வழங்கமாறு பயனரிடம் தற்போது கேட்கப்படும்.
  • பயனர் விவரங்களை நல்ல நம்பிக்கையுடன் வழங்குகிறார் மற்றும் 'சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்கிறார்.
  • இப்போது பயனருக்கு ஒரு பிழை பக்கம் காண்பிக்கப்படும். அவ்வளவுதான் பயனர் ஃபிஷிங் தாக்குதலுக்கு இரையாகிவிட்டார்.

அறியப்படாத மூலத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய எந்தவொரு இணைப்பையும் ஒருவர் கிளிக் செய்யக்கூடாது என்று எஸ்பிஐ அறிவுறுத்துகிறது. இது 'ஃபிஷிங் தாக்குதல்' அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கலாம். பாப்-அப் சாளரமாக தோன்றிய பக்கத்தில் நீங்கள் எந்த தகவலையும் வழங்கக்கூடாது.

மேலும் தகவலுக்கு onlinesbi.com ஐப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sbi Bank Sbi Bank Alert
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment