Advertisment

SBI Online And Timing: பொன்னான நேரம் முக்கியம், வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாமே?

SBI Online, SBI Timings: வங்கி கிளைகளுக்கு நேரடியாக வருவதற்கு பதிலாக டிஜிட்டல் முறைகளை பயன்படுத்த மக்களை வற்புறுத்துகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Online And Timing: பொன்னான நேரம் முக்கியம், வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாமே?

State Bank Of India Netbanking, State Bank Of India Tamil News, SBI, SBI Online, SBI Timings, எஸ்பிஐ வங்கி, ஸ்டேட் வங்கி

State Bank Of India Tamil News: ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிகள் விதிகளை கடைபிடிக்கும் வகையில் தங்கள் பணி நேரத்தை மாற்றியமைத்துள்ளன. மாற்றியமைக்கப்பட்ட வங்கி கிளை நேரங்களை போல, வங்கிகள் பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. மேலும் கிளைகளில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் வகைகளுக்கு ஒரு வரம்பை ஏற்படுத்தியுள்ளன. அதோடு வங்கி கிளைகளுக்கு நேரடியாக வருவதற்கு பதிலாக டிஜிட்டல் முறைகளை பயன்படுத்த மக்களை வற்புறுத்துகின்றன.

Advertisment

‘பல மாநிலங்களில் எங்கள் கிளை திறக்கும் நேரங்களை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். சில மாநிலங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மற்ற சில மாநிலங்களில் 8 மணி முதல் 11 மணி வரையும், வேறு சில மாநிலங்களில் 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் என வைத்துள்ளோம்’ என எஸ்பிஐ வங்கியின் Managing Director (Retail Banking), PK Gupta தெரிவித்துள்ளார்.

SBI NetBanking, SBI Timings: ஆன்லைனில் பரிவர்த்தனை

வங்கி திறப்பு நேரங்களை மாற்றியமைத்ததை போல வங்கி சேவைகளுக்கு மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பாதுகாப்பாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்திக் கொள்ள வங்கி ஊக்குவித்து வருகிறது. மேலும் நடமாடும் ஏடிஎம்களையும் வங்கி நாடு முழுவதும் நிறுத்தியுள்ளது.

ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வது என்பதையும் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தவறாமல் தெரிவித்து வருவதோடு, சைபர் கிரிமினல்களை எவ்வாறு தெளிவாக தடுக்க முடியும் என்றும் கூறி வருகிறது.

மார்ச் 23, 2020 முதல் அத்தியாவசிய சேவைகளான வங்கி கணக்கில் பணம் போடுவது, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது, cheque clearing, பணம் அனுப்புவது மற்றும் அரசு பரிவர்த்தனைகள் மட்டும் தான் வங்கி கிளைகள் மூலம் செய்யப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (Indian Banks' Association -IBA) தெரிவித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அத்தியாவசியம் இல்லாத பிற வங்கி சேவைகளை கைபேசி அல்லது ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளும்படி IBA வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறது. இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களும் இருப்பதை உறுதி செய்யவும் டிஜிட்டல் சேவை முறைகள் up-to-date இருப்பதை உறுதி செய்யவும் IBA நாள் முழுவதும் வேலை பார்த்து வருகிறது.

இது தவிர ஏதாவது கூடுதல் தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கிளையை தொடர்பு கொள்ளவோ அல்லது IVR வசதியை கால் செண்டர் மூலமாக தொடர்பு கொள்ளவோ செய்யலாம் என IBA தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment