Advertisment

SBI வாடிக்கையாளரா நீங்க?. உங்க கடன் தவணை எத்தனை மாதத்திற்கு தடை - வாங்க தெரிந்துகொள்ளலாம்

. உங்களுக்கு 3 மாத அவகாசம் வேண்டுமென்றால் நீங்கள் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் அதை தெரிவிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank of india,loans,emi moratrium,home loans,SBI

state bank of india,loans,emi moratrium,home loans,SBI

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27 ஆம் தேதி வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உட்பட அனைத்து முன்னனி நிறுவனங்களும் தங்களிடன் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கடன் தவனையை திருப்பி செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என அறிவித்தது. இந்த அவகாசம் மார்ச் 1, 2020 மற்றும் மே 31 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் செலுத்த வேண்டிய அனைத்து கடன் தவனைகளுக்கும் பொருந்தும். மார்ச் 1, 2020 மற்றும் மே 31 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டு அவகாசம் வழங்கப்பட்ட தவனைகளில் இவைகளும் (i) principal and/or interest components; (ii) bullet repayments; (iii) equated monthly instalments (EMIs); (iv) credit card dues உள்ளடங்கும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கடன் தவனை செலுத்துவதில் மூன்று மாத அவகாசம் குறித்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்தான முடிவை கடன் வாங்கியவர் தான் எடுக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு போதுமான பணப்புழக்கம் இருந்தால் இந்த மூன்று மாத அவகாசத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் பண பிரச்சனையை எதிர்கொண்டால் இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா மாதமும் கடன் தவனைத் தொகையை எடுத்துக் கொள்ள நீங்கள் எஸ்பிஐ வங்கியிடம் standing instruction கொடுத்திருந்தால், நீங்கள் வங்கியிடம் தெரிவிக்கும் வரை அது தொடர்ந்து நடைபெறும். உங்களுக்கு 3 மாத அவகாசம் வேண்டுமென்றால் நீங்கள் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் அதை தெரிவிக்க வேண்டும். உங்கள் சேமிப்பு கணக்கில் பணமிருந்து நீங்கள் வங்கிக்கு standing instruction கொடுத்திருந்தால், பணம் தொடர்ந்து கடன் தவனைக்காக எடுக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் MD - Retail & Digital Banking C. S. Setty அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment