Advertisment

உங்கள் செல்போனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ எளிய வழி!

UIDAI இன் நேரடி இணைப்பு மூலம் உங்கள் ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது என்பதை பாருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆதாரை எங்கெல்லாம் பயன்படுத்தி இருக்கீங்க? தெரிந்துக் கொள்ள சிம்பிள் ஸ்டெப்ஸ்

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருப்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல, நிதிச் சேவைகளுக்கும் ஆதார் அவசியம். இது வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் போன்றவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் பற்றிய விவரங்கள் உள்ளன.

Advertisment

நம்மிடம் ஆதார் அட்டையின் நகல் எப்போதும் இருக்காது. UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்தியர்கள் தங்கள் ஆதார் அட்டையைப் பெற அனுமதிக்கிறது.

eaadhaar.uidai.gov.in என்ற நேரடி ஆதார் இணைப்பு மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.

இதுகுறித்து UIDAI ஜூன் 28, 2021 தேதி, பதிவிட்ட ட்வீட்டில், “முழுமையான ஆதார் எண்ணைக் காட்டும் ‘ரெகுலர் ஆதார்’ அல்லது கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க்டு ஆதார்’ ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்."

eaadhaar.uidai.gov.in இலிருந்து எந்த நேரத்திலும் எங்கும் ஆதாரை எவ்வாறு பதிவிறக்குவது என்பது குறித்த வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

நேரடி இணைப்பில் இருந்து ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: eaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Download Electronic Copy of Your Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 2: உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

படி 3:  மாஸ்க்டு ஆதார் அட்டைக்கு, I want a Masked Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 4: Send OTP ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும்.

படி 5: உங்கள் OTP ஐ உள்ளிட்டு, ’Submit’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்        

படி 6: OTP வெற்றிகரமாக அங்கீகரித்த பிறகு, ‘Download Aadhaar' ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆதாரின் PDF பதிப்பைப் பெறலாம்.

படி 7: உங்கள் பிறந்த தேதியின் முதல் நான்கு இலக்கங்களை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

படி 8: எதிர்கால தேவைக்கு, உங்கள் ஆதாரின் PDF பதிப்பை உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் வைத்திருங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக, மாஸ்க்டு ஆதார் உங்கள் ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களை மறைக்கிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment