Advertisment

ஆசியா பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

Business Update : மூன்று ஆண்டுகளில், அதானி குழுமம் ஏழு விமான நிலையங்களின் கட்டுப்பாட்டையும், இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியையும் கைப்பற்றியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆசியா பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

Tamil National Update : அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Advertisment

இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி சிறிய பொருட்களின் மூலம் வர்த்தகத்தை தொடங்கி தற்போது துறைமுகங்கள், சுரங்கங்கள், மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல கூட்டு நிறுவனங்களாக மாற்றியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ளூம்பெர்க் ஆய்வின்படி, 56 வயதான கௌதம் அதானியில் மொத்த சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராக உள்ளது.

இதில் அதானி தனது தனிப்பட்ட சொத்து மதிப்பில், 12 பில்லியன் உயர்வுடன், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டியவர் என்ற பெயரெடுத்துள்ளார்.  நிலக்கரி அதிபர், ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டம், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட காலநிலைதிட்டங்களில் பங்குகளை பெற்றுள்ளார். இந்த வளர்ச்சி, முன்னுரிமைகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டின் நீண்டகாலப் பொருளாதார இலக்குகளை அடைவதற்கும் முக்கியமானதாகக் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்.

மேலும் அதானி குழுமம் சரியான நேரத்தில் அனைத்து துறைகளையும் கண்டறிந்து அதில் முதலீடு செய்து வெற்றியும் கண்டுள்ளது.இது வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவைக் கவர்ந்துள்ளது" என்று மும்பையை நேர்ந்த தரகு எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் லிமிடெட்டின் சில்லறை ஆராய்ச்சித் தலைவர் தீபக் ஜசானி கூறியுள்ளார். இதில் அதானி குழுமத்தின் சில பட்டியலிடப்பட்ட பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 600% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது,.

பசுமை எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புக்கான அவரது முயற்சிக்கு பலனளிக்கும், வகையிலும், $ 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், இந்தியாவின் கார்பன் நிகர-பூஜ்ஜிய இலக்கை 2070 க்குள் அடையவும் பிரதமர் மோடி எதிர்பார்க்கிறார்.

அம்பானி முதலிடத்தில் இருந்த 2020-ம் ஆண்டு அவரது ஆயில்-டு-பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இன்க் நிறுவனங்களை முதலீட்டாளர்களாகக் கொண்டு வந்து தொழில்நுட்ப மையத்தின் மூலம் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை உருவாக்கியது.

புதைபடிவ எரிபொருட்கள் அல்லது நிலக்கரி மூலம் தங்கள் ஆதிக்த்தை செலுத்த அம்பானி அதானி என இரு இந்திய கோடீஸ்வரர்களும் இப்போது பசுமை எரிசக்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புதுப்பிக்கத்தக்க வகையில் $76 பில்லியன் செலவழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று ஆண்டுகளில் அம்பானி $10 பில்லியன்களை உறுதி செய்துள்ளார். அதானி தனது குழுவை உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் $70 பில்லியன் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

டோட்டல் எஸ்இ (Total SE) மற்றும் வார்பர்க் பின்கஸ் எல்எல்சி (Warburg Pincus LLC) உள்ளிட்ட நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டின் 20% மற்றும் இந்திய பங்குதாரரின் போர்ட்ஃபோலியோவில் 50% பங்குகளை வாங்குவதற்கு ஜனவரி 2021 இல் ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக மார்ச் 2021 இல், அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தில் $110 மில்லியன் முதலீடு செய்வதாக வார்பர்க் கூறியுள்ளது.

தனது பசுமை உந்துதலின் ஒரு பகுதியாக, அதானி தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 2025 ஆம் ஆண்டு எட்டு மடங்கு உயர்த்துவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளார். மே மாதம், அதானி கிரீன், எஸ்பி (SB) எனர்ஜி இந்தியாவுக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் சாஃப்ட் பேங்க் குரூப் கார்ப் (SoftBank Group Corp.) இன் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்தை $3.5 பில்லியன் நிறுவன மதிப்புடன் வாங்க ஒப்புக்கொண்டார்..

மூன்று ஆண்டுகளில், அதானி குழுமம் ஏழு விமான நிலையங்களின் கட்டுப்பாட்டையும், இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியையும் கைப்பற்றியுள்ளது. அவரது குழு இப்போது நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர், பவர் ஜெனரேட்டர் மற்றும் அரசு சாரா துறையில் நகர எரிவாயு சில்லறை விற்பனையாளர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், பிரெஞ்சு நிறுவனத்துடன் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மும்பையில் பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனப் பங்குகள், 1,000% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதில் ஃபிளாக்ஷிப் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 730% க்கும் அதிகமாக முன்னேறியுள்ளது, இந்த காலகட்டத்தில் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட். 500% மற்றும் அதானி துறைமுகங்கள் 95%. பெஞ்ச்மார்க் எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் இன்டெக்ஸ் ஒப்பிடுகையில் 40% அதிகரித்துள்ளது.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, 1980-களின் முற்பகுதியில் மும்பையின் வைரத் தொழிலில் தனது தொழிலை முதன்முதலில் முயற்சித்தார். 1988ல் அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். தொழிலதிபர் நெருக்கடிகளில் இருந்து தப்பியவர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், சிலரால் கடத்திச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார். தொடர்ந்து 2008 மும்பையில் 166 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் போது மும்பையின் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பிணைக் கைதிகளில் ஒருவராக இருந்தார்.

அதானியின் நிலைத்தன்மை உரிமைகோரல்கள் மற்றும் பசுமை லட்சியங்கள் ஆஸ்திரேலியாவில் குழுவின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை சுட்டிக்காட்டி பலரும் விமர்சிக்கின்றனர். அதானி குழுமம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட பிறகு அதன் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றுமதியைத் முதன் முதலானக தொடங்கத் தயாராக இருப்பதாக டிசம்பரில் கூறியது.

பில்லியனர் பிரதமர் மோடியின் அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளானார், அதை சிலர் குரோனிசம் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் அதானி இத்தகைய விமர்சனங்களை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் முன்னுரிமைகளுடன் தனது முதலீடுகளை கவரும் வகையில் தனது வெற்றிகரமான உத்தியால் முன்னேறியுள்ளார். அதானி குழும வணிகங்கள் துறைமுகங்கள் போன்ற சில பெரிய திட்டங்கள், "கிட்டத்தட்ட ஏராளமாக உள்ளன" என்று உள்ளூர் தரகு ஐஐஎஃப்எல் (IIFL Securities Ltd) இன் இயக்குனர் சஞ்சீவ் பாசின் கூறினார்.

பல அதானி நிறுவனங்கள் இந்தியாவின் தொழில்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு உந்துதலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், அவை "சிறப்பாக இடத்தில் உள்ளன. அவர்கள் அதை மூலதனமாக்கிக் கொண்டுள்ளனர்,” என்று பாசின் மேலும் கூறியுள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Mukesh Ambani Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment