ஈஸியா கிடைக்குது… ஆனாலும் பர்சனல் லோன் வாங்கும் முன் இதை கவனியுங்க!

Personal Loan Thigns : தனிப்பட்ட கடன் பெறுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Business For Personal Loan Update : தற்போதைய காலகட்டத்தில் பலரும் தங்களது சொந்த தேவைக்காக தனிநபர் கடன்களை பெற முயற்சி செய்து வருகின்றனர். முதலில் கார் வீடு போன்ற தேவைகளுக்காக தனிப்பட்ட கடன்களை பெற்று வந்த நிலையில், தற்போது குழந்தைகளின் கல்வி உட்பட இதர தேவைகளுக்கும் தனிப்பட்ட கடன்களை பெற்று வருகிறனர். இதற்கு முக்கிய காரணம் பொதுவாக தனிப்பட்ட கடன்களில் தொந்தரவில்லாதவை மற்றும் இதற்கான விதிமுறைகள் ஏற்கனவே வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன.

தனிப்பட்ட கடன் என்பது ஒரு தனிநபரின் எந்தவொரு தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் மிகவும் பிரபலமான மற்றும் எளிதான பாதுகாப்பற்ற கடன் முறையாகும். இந்த கடன் வசதி மூலம் ஒருவர் எந்தவொரு நிதி நெருக்கடியில் இருந்தாலும் தனிப்பட்ட கடன்களை பெறமுடியும். இதில் மருத்துவ அவசரநிலை உட்பட பல முக்கிய காரணங்களுக்காகவும் பெற வசதி உள்ளது.

மேலும் பலரும் இந்த தனிப்பட்ட கடனை பெறுவதற்கு இந்த கடன் எளிதில் கிடைப்பது மற்றும் தொந்தரவு இல்லாமல் நிதி பெறுவது போன்ற போன்ற வசதிகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒருவர் சம்பளக் கணக்குகளைக் கொண்ட கடன் பெறுபவர்கள் வங்கியின் மொபைல் வங்கி (Mobile Banking) வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட கடன் சலுகைகளை சரிபார்க்கலாம்.

இந்நிலையில் தனிப்பட்ட கடன்கள் வாங்கும்போது சரிபார்க்க வேண்டியவை எவை எனபது குறித:து வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

தனிநபர் கடனை எடுக்கும்போது, கடன் வாங்க வேண்டிய தொகை, எப்போது கடன் தேவைப்படும். வெவ்வேறு கடன் வழங்குநர்களின் வட்டி விகிதங்களை சரிபார்த்து ஒப்பிட வேண்டும். கடன் விகிதங்கள் கடன் வழங்குநர்களிடையே மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கூடுதலாக, கடனாளிகள் கடனுடன் முன்னேறுவதற்கு முன், செயலாக்க கட்டணம் மற்றும் கடன் தொகையை முழுவதும் செலுத்துவதற்கு முந்தைய கட்டணங்களை சரிபார்க்க வேண்டும். செயலாக்க கட்டணம் வங்கியில் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். சில வங்கிகள் செயலாக்க கட்டணமாக முன்கூட்டியே அதிக தொகையை வசூலிக்கின்றன.

இதனால் அவசர நிதி அல்லது முன்கூட்டியே சம்பளத்தைத் வைத்து பட்ஜெட் செய்யும் நபர்களுக்கு, மிக நீண்ட செயலாக்க நேரத்துடன். வங்கிகளிடமிருந்து தனிநபர் கடன்கள் சிறந்த இடமாக இருக்காது, தனிப்பட்ட கடனை பெற தகுதி பெறுவதற்கு, பெரும்பாலான கடன் வழங்குநர்கள் வருமானம், திருப்பிச் செலுத்தும் திறன், கடன் மதிப்பெண் மற்றும் கடன் வாங்கியவரின் தற்போதைய மாதாந்திர செலவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். சிறந்த மதிப்பெண் என்பது கடன்களுக்கான சிறந்த விகிதங்களைக் குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சமீபத்திய காலங்களில், நிறைய கடன் வழங்குநர்கள் தங்கள் உள் மதிப்பீட்டு முறைகளையும் நம்பியிருக்கிறார்கள், இதில் வங்கி அறிக்கைகள், சமூக ஊடக தொடர்பு விவரங்கள் போன்ற மாற்றுத் தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் அதிகபட்ச கடன் தொகை கடன் வழங்குபவர்களின் ஆபத்து மற்றும் உள் கொள்கையையும் பொறுத்து வழங்குவார்கள். உதாரணமாக, வங்கிகள் ரூ .2 லட்சம் முதல் 40 லட்சம் வரை வழங்கலாம், ஃபிண்டெக் இயங்குதளங்கள் ரூ .50,000 முதல் ரூ .5 லட்சம் வரை இருக்கலாம்.

தனிப்பட்ட கடன்கள் பொதுவாக மற்ற வகை கடன்களைப் போலல்லாமல் பாதுகாப்பற்ற கடன்களாக இருப்பதால், அவர்களுக்கு மற்ற வகை கடன்களைக் காட்டிலும் மிகக் குறைந்த செயலாக்கம் மற்றும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. மேலும், நிதிகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவில்லை என்பது தனிநபர் கடனின் ஒரு நன்மையாகும்.

தனிப்பட்ட கடன்களை பெற்று மருத்துவ செலவுகள், விடுமுறைகள், திருமணங்கள் போன்ற எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் கல்வி கடன், வீட்டுக் கடன், கார் கடன், இரு சக்கர வாகனம் போன்ற பிற குறிப்பிட்ட கடன்கள் பணத்தின் பயன்பாடுகளை தெளிவாக வரையறுக்கின்றன, இதில் தங்கக் கடன் மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்பு வாங்க அல்லது பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil business update key things consider for personal loan

Next Story
ஆதார்- பிஎஃப் இணைப்பு கட்டாயம்: சிம்பிள் ஸ்டெப்ஸ் இங்கே!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com