Advertisment

செகண்ட் ஹேண்ட் பைக் வாங்க போறீங்களா? ஆர்.சி.யில் எச்சரிக்கையா இருங்க...

தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில், கொரேனா தொற்று தாக்கத்திற்கு பிறகு செனண்ட ஹேண்ட் வாகனங்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செகண்ட் ஹேண்ட் பைக் வாங்க போறீங்களா? ஆர்.சி.யில் எச்சரிக்கையா இருங்க...

நீங்கள் செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கும் வழக்கம் உள்ளவர் என்றால் அடுத்த முறை வாகனத்தை வாங்கும்போது வாகன பதிவுச் சான்றிதழில் (ஆர்சி) கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் தற்போது போலி வாகன பதிவுச் சான்றிதழ்கள் அதிகரித்து வருகிறது.

Advertisment

தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில், கொரேனா தொற்று தாக்கத்திற்கு பிறகு செனண்ட ஹேண்ட் வாகனங்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு கோவையைச் சேர்ந்த ஏஜெண்டுகள் சிலர் நூற்றுக்கணக்கான போலி ஆர்சிகளை விநியோகித்து வந்த மோசடியை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.

கடந்த மே 24 அன்று, நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் என்பவர் தான், சொந்தமாக பைக் வைத்திருப்பதாகக் கூறி, தனது பைக்கில் ஹைபோதெகேஷன் ரத்து செய்யக் கோரி, உள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்றுள்ளார். அப்போது அவர்கொண்டு வந்த விண்ணப்பம் மற்றும் ஆதார் ஆவணங்களை ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் டி நித்யா, அந்த ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதை கண்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். கோகுல் சமர்ப்பித்த ஸ்மார்ட் பதிவுச் சான்றிதழை அசல் சான்றிதழுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் இருந்துள்ளது. எழுத்துரு அளவும், நிழலும் (ஷேடோ) ஒரே சீராக இல்லை மற்றும் பதிவு எண்ணுக்கு இடையில் இடைவெளி இருந்தது.

மேலும் இந்த ஆர்சியில் TN 28BV8169 வடிவத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் வாகனத்தில் TN28 என அச்சிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி கார்டை ஸ்கேன் செய்து பார்த்ததில் அதில் தமிழ்நாடு  லோகோ இல்லாதது தெரியவந்தது. அதன்பிறகு இது போலி கார்டு என்பதை உறுதி செய்த, ஜூன் 6ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்த விசாரணையில், போலி கார்டு வாங்கியதை கோகுல் ஒப்புக்கொண்டார்.

கோயம்புத்தூரில் உள்ள ரகுமான் மற்றும் சுல்தான் என 2 முகவர்களிடமிருந்து ஆர்சி கார்டு பெற்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் போலி ஆர்சி கார்டுகளை மாநிலம் முழுவதும் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குபவர்களுக்கு ரூ.100 முதல் 10000 ரூபாய் வரை விற்பனை செய்தை போலீசார் பின்னர் கண்டுபிடித்தனர். இதில் ஈரோட்டைச் சேர்ந்த வாகனத்தின் அசல் உரிமையாளருக்கு, அவரது பெயரில் போலி கார்டு வாங்கப்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.

அவர் வங்கி சாரா நிதிக் கழகம் (NBFC) அனுமதித்த கடன் மூலம் முதலில் வாகனத்தை வாங்கினார். ஆனால் அவரால் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாததால், என்பிஎஃப்சி (NBFC) வாகனத்தை பறிமுதல் செய்து ஏலம் விட்டது.இதையறிந்த கோகுல், மார்க்கெட் விலையுடன் ஒப்பிடும் போது, ​​ஏலத்தின் போது குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் பைக்கை வாங்கலாம் என்று போலி கார்டை கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான பழைய வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் போலி ஆர்சிகளுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏலத்தில் பழைய வாகனங்களை வாங்க ஏஜெண்டுகளிடம் இருந்து போலி ஆர்.சி.க்களை வாங்கியவர்கள், தேவை அதிகம் உள்ள சந்தைகளில் குறைந்த விலையில் இந்த வாகனங்களை மறுவிற்பனை செய்திருக்கலாம் என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் "பலர் நல்ல மற்றும் குறைந்த விலையில் பைக் கிடைக்கும்போது முந்தைய உரிமையாளர் விவரங்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் ஒரு பைக்கிற்கு ரூ. 5,000 முதல் ரூ. 8,000 குறைவு. ஆனால் இதற்காக வழங்கப்படும் போலி ஆர்சிக்கள் மாநிலத்தில் உள்ள எந்த ஆர்டிஓ அலுவலகங்ககளிலும் ஸ்கேனர்கள் பொருத்தப்படவில்லை, இது அசல் அட்டைகளிலிருந்து போலி கார்டுகளை எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.

இதனால் தற்போது, ​​போக்குவரத்து கமிஷனர், இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு, ஸ்கேனர்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business Update 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment