Advertisment

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் 2 மாதங்களில் இத்தனை ஹவுசிங் புராஜக்ட்கள் பதிவா?

அரசு விதிகளின்படி, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் இரண்டே மாதங்களில் வியக்கும் படியாக பல ஹவுசிங் புராஜக்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnrea, Tamil Nadu Real Estate Regulatory Authority, ரியல் எஸ்டேட், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், டிஎன்ஆர்இஏ, 160 ஹவுசிங் புராஜக்ட்கள் பதிவு, 160 housing projects registered with tnrea, Chennai news, ரியல் எஸ்டேட், tamil nadu latest news, latest tamil news, Chennai news today, Today tamil news Chennai,TNRERA,tamil nadu housing projects

அரசு விதிகளின்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து ரியல் எஸ்டேட் முகவர்களும் வருமான வரிச் சட்டம் - 1961, விதிகளின்படி அவர்களுடைய நிறுவனக் கணக்குகள், பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டம், ஜூன் 22, 2017 அன்று தமிழ்நாட்டில் ஆணையத்தை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு அறிவித்த பின்னர் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் லேஅவுட்கள் உட்பட 160 ஹவுசிங் புராஜக்ட்கள் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (டி.என்.ஆர்.ஆர்.ஏ) பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள விவரங்கபடி, இந்த புராஜக்ட்களில் பெரும்பாலானவை சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ளன என்பதைக் காட்டுகின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரி வரை 149 புராஜக்ட்கள் பதிவு செய்யப்பட்டவைகள். மீதமுள்ள புராஜக்ட்கள் வை மார்ச் 5-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) விதிகள், 2017 இன் படி, குறைந்தபட்சம் எட்டு அலகுகளைக் கொண்ட அனைத்து ஹவுசிங் புராஜக்ட்களும் தமிழ்நாடு ரியல் எஸ்டேக் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வீட்டு லேஅவுட்களும் ரியல் எஸ்டேட் சட்டத்தின் கீழ் வருகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment