Advertisment

3% வட்டியில் ரூ3 லட்சம் வரை கடன்... SBI-ல் இந்த வசதியை பயன்படுத்துகிறீர்களா?

Tamil Business Update : எஸ்பிஐ கேசிசி (SBI KCC)  விவசாயிகளின் அவசர செலவுகள் மற்றும் துணை நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை ஒரு எளிய நடைமுறையின் மூலம் நிவர்த்தி செய்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
3% வட்டியில் ரூ3 லட்சம் வரை கடன்... SBI-ல் இந்த வசதியை பயன்படுத்துகிறீர்களா?

Tamil SBI KCC Update : இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) விவசாயிகளுக்கு அவர்களின் சாகுபடிச் செலவுகளைச் சமாளிக்க சரியான நேரத்தில் மற்றும் போதுமான கடனை வழங்குகிறது என்று கூறுகிறது. மேலும் எஸ்பிஐ கேசிசி (SBI KCC)  விவசாயிகளின் அவசர செலவுகள் மற்றும் துணை நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை ஒரு எளிய நடைமுறையின் மூலம் நிவர்த்தி செய்கிறது. இது கடன் வாங்குபவர்கள் அவர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன்களைப் பெற அனுமதிக்கிறது என்றும் எஸ்பிஐ வங்கி கூறுகிறது.

Advertisment

எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டின் (கேசிசி) விவரங்களுடன் பாரத ஸ்டேட் வங்கியின் விரிவான படிப்படியான செயல்முறை பற்றியும், கடன் பெறுவதற்கு தேவையான தகவல்கள், விவரங்கள், அம்சங்கள் மற்றும் விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளைச் சமாளிக்க தடையில்லா விவசாயக் கடன்களைப் பெறுவதற்கான செயல்முறை ஆகியவற்றை பற்றியும் இங்கே காணலாம்.

எஸ்பிஐ கேசிசி (SBI KCC) அம்சங்கள் மற்றும் நன்மைகள்

கேசிசி ஒரு சுழலும் பண வரவு கணக்கு போல இருக்கும்

- கணக்கில் உள்ள கடன் இருப்பு, ஏதேனும் இருந்தால், சேமிப்பு வங்கியின் வட்டி விகிதத்தைப் பெறும்

காலம்: 5 ஆண்டுகள், வருடாந்திர மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வரம்பில் 10% வருடாந்திர அதிகரிப்பு செய்யப்படும்.

வட்டி மானியம்: உடனடி கடன் வாங்குபவர்களுக்கு 3% வட்டியில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும்

திருப்பிச் செலுத்துதல்: பயிர் காலம் (குறுகிய/நீண்ட) மற்றும் பயிருக்கான சந்தைப்படுத்தல் காலத்தின்படி திருப்பிச் செலுத்தும் நடைமுறை.

தகுதியுள்ள அனைத்து கேகேசி விவசாயிகள் கடன் வாங்குபவர்களுக்கும் ரூபே (RuPay) அட்டைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

விபத்து காப்பீடு ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் ரூ. 45 நாட்களுக்குள் கார்டை செயல்படுத்தினால் 1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்.

எஸ்பிஐ கேசிசி (SBI KCC)  தகுதிகள்

உரிமையாளர் விவசாயிகளான அனைத்து விவசாயிகள்-தனிநபர்கள்/கூட்டு கடன் வாங்குபவர்கள்

குத்தகைதாரர் விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள், பங்கு பயிர் செய்பவர்கள்,

சுய உதவிக்குழுக்கள் அல்லது விவசாயிகளின் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், இதில் குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்பவர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

எஸ்பிஐ கேசிசி (SBI KCC) வட்டி விகிதம்

ரூ. 3.00 லட்சம் - 7% வட்டி வசூலிக்கப்படும். அதற்கு மேல் கடன்பெற்றாரல் தொகைக்கு ஏற்ப வட்டி நிர்ணையம் செய்யப்படும்.

எஸ்பிஐ கேசிசி: காப்பீடு

-70 வயதிற்குட்பட்ட கேசிசி (KCC) கடன் வாங்குபவர்கள் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் (PAIS) கீழ் பாதுகாக்கப்படுவார்கள்

தகுதியான பயிர்கள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னா (PMFBY) கீழ் பாதுகாக்கப்படுகின்றன

எஸ்பிஐ கேசிசி பாதுகாப்பு

முதன்மை: பயிரின் ஹைபோதெகேஷன்.

இணை: விவசாய நிலத்தின் மீதான அடமானம்/கட்டணம் (இணைப் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது:

கேசிசி வரம்பு ரூ.1.60 லட்சம் வரை.

டை-அப்பின் கீழ்: கேசிசி வரம்பு ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.

எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது

எஸ்பிஐ( SBI ) இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும் - https://sbi.co.in/documents/14463/22577/application+form.pdf/24a2171c-9a...

விவசாயிகள் நேரடியாக எஸ்பிஐ கிளைக்குச் சென்று கேசிசி விண்ணப்பப் படிவத்தைக் பெறலாம்

அந்த விண்ணப்பத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து கிளையில் சமர்ப்பிக்கவும்

வங்கி விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து, அட்டையை பெற அனுமதிக்கும்

யோனோ எஸ்பிஐ மூலம் கேசிசி மதிப்பாய்வு செய்வதன் முக்கிய அம்சங்கள்:

யோனோ ஆப் அல்லது யோனா கிளை மூலம் தொந்தரவு இல்லாத கேசிசி மதிப்பாய்வு செய்யப்படும்.ஃ

யோனோ ஆப் மூலம் விண்ணப்பிப்பதற்கான தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற விண்ணப்பமுறையாகும்.

யோனோ கிளை போர்ட்டலில் முடிவடையும் செயல்முறை

கேசிசி  மதிப்பாய்வு செயல்முறையின் தரப்படுத்தல்

விவசாயி மற்றும் கிளை மூலம் குறைந்தபட்ச தரவு உள்ளீடு

யோனோ வழியாக கேசிசி மதிப்பாய்வு செய்வது எப்படி

யோனோ எஸ்பிஐ-இல் உள்நுழையவும்

அதில் யோனோ கிருஷி (YONO Krishi)  என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்

கட்டாவில் கிளிக் செய்யவும்

அதன்பிறகு கிசான் கிரெடிட் கார்டில் கிளிக் செய்யவும்

அதன்பிறகு தனிப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்தவும்

அடுத்து நில விவரங்களை உறுதிப்படுத்தவும்

அதன்பிறகு பயிர் விவரங்களை உறுதிப்படுத்தவும்

இறுதியாக அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

எஸ்பிஐ கேசிசி-க்கு தேவையான ஆவணங்கள்

முகவரி மற்றும் அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்றவை (ஏதேனும் ஒன்று)

விவசாய நிலத்தின் ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வழங்குபவர் வங்கிகளும் பாதுகாப்புப் பின் தேதியிட்ட காசோலையைச் சமர்ப்பிக்கச் சொல்லலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment