Advertisment

Recurring Deposit: அதிக வட்டி வழங்கும் வங்கிகள் இவைதான்!

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
recurring deposit, small finance bank, rd interest rate

ரெக்கரிங் டெபாசிட் என அழைக்கப்படும் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து மிகப் பெரிய தொகையாக வட்டி விகித லாபத்துடன் பெற முடியும். தொடர்ச்சியான வைப்புக் கணக்கில், வாடிக்கையாளர் தவணைகளில் பணம் செலுத்தலாம். முதிர்வுத் தொகையை முதிர்வு தேதியில் பெற முடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற பல வங்கிகள் RD கணக்கைத் திறக்கும் வாய்ப்பை வழங்குகிறார்கள். பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போல ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளிடமும் RD கணக்குகளை தொடங்க முடியும்.

Advertisment

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. பெரும்பாலான ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 6 மாதங்கள் முதல் 10 வருடங்களுக்கான ஆர்.டி கணக்குகளை திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்.

உட்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இது அதிகபட்சமாக 24 முதல் 36 மாதங்கள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு வட்டியாக 8% வழங்குகிறது.

12, 15, 18, 21, மற்றும் 24 மாதங்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு அதே 7.25% வட்டி வழங்குகிறது.

உட்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 24 முதல் 36 மாதங்கள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு 8.50% வட்டி வழங்குகிறது.

6 மாதங்கள் வரை- 6.50%

9 மாதங்கள் - 6.50%

12 மாதங்கள் -7.25%

15 மாதங்கள் - 7.25%

18 மாதங்கள் -7.25%

21 மாதங்கள் -7.25%

21 மாதங்களுக்கு மேல் 24 மாதங்களுக்குள்-7.25%

24 முதல் 36 மாதங்கள் -8.00%

3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்கள் வரை -7.25%

5 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை -7.25%

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இந்த வங்கி 36-60 மாதங்கள் வரையிலான RD கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75%வழங்குகிறது.

ஒரு மாதம் முதல் 6 மாதம் வரை- 4% வட்டி

6 மாதம் முதல் 12 மாதம் வரை -6%

12 மாதம் முதல் 36 மாதம் வரை -7%

36 மாதம் முதல் 60 மாதம் வரை-7.25%

60 மாதம் முதல் 120 மாதங்கள் வரை -6.50%

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

5 வருட ஆர்டி கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75% வழங்குகிறது.

6 மாதங்கள் - 5.50%

9 மாதங்கள்- 6.00%

12 மாதங்கள் - 6.75%

15 மாதங்கள் -6.75%

18 மாதங்கள் -6.75%

21 மாதங்கள் -6.75%

24 மாதங்கள் - 6.75%

27 மாதங்கள் - 7.00%

30 மாதங்கள் - 7.00%

33 மாதங்கள் -7.00%

36 மாதங்கள் -7.00%

3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்களுக்குள் -7.10%

5 வருடங்கள் -7.25%

5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை - 6.50%

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இந்த வங்கி அதிகபட்சமாக 2 வருட ஆர்டி கணக்குகளுக்கு 7.50% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 8% வழங்குகிறது.

3 மாதங்கள் - 4.25%

6 மாதங்கள் -4.50%

9 மாதங்கள் - 5.50%

ஒரு வருடம் - 5.50%

2 வருடம் -7.50%

3 வருடம் -7.00%

4 வருடம் -7.00%

5 வருடம் -6.50%

5 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை- 6.50%

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Recurring Deposit Account Small Finance Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment