Advertisment

இந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை... ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி

Free ATM withdrawal: இந்துஸ்இந்த், ஐடிபிஐ, சிட்டி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை அன்லிமிட்டடாக வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
ATM charges

ஏடிஎம்களில் அனுமதி அளிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இதனால் வங்கிகள் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்துகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச கட்டணங்கள் ரூ.20 என்பதில் ரூ.21 ஆக உயர்த்தப்படும் என்றும் புதிய கட்டணங்கள் ஜனவரி 1 2022 முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. வங்கி ஒழுங்குமுறை கடைசியாக ஆகஸ்ட் 2012 இல் திருத்தப்பட்டது, அந்த பரிந்துரைகளின் படி வாடிக்கையாளர் கட்டணங்கள் ஆகஸ்ட் 2014 இல் திருத்தப்பட்டது

Advertisment

இந்த நிலையில், இந்துஸ்இந்த், ஐடிபிஐ, சிட்டி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை அன்லிமிட்டடாக வழங்குகிறது.

ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதே வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மற்ற வங்கி ஏடிஎம்களில் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம். இந்துஸ்இந்த் வங்கி வாடிக்கையாளர்கள் அதே வங்கி மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணங்கள் கிடையாது. சிட்டி வங்கி இந்தியாவில் இருந்து விரைவில் வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

மாற்றப்பட்ட ஏடிஎம் கட்டணங்கள்

வங்கிகள் செலுத்தும் இன்டர்சேஞ்ச் கட்டணம் ரூ.16 முதல் ரூ.17 ஆக அதிகரிக்க உள்ளது. இக்கட்டணம் ஆகஸ்ட் 1 2021 முதல் அமலாக உள்ளது. இன்டர்சேஞ்ச் கட்டணம் என்பது ஏடிஎம் கார்டு கொடுக்கும் வங்கிகள் ஏடிஎம் நிர்வாகம் செய்யும் நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் கட்டணம்.

தற்போது ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூன்று அல்லது ஐந்து இலவச பரிவர்த்தனைகள் வழங்குகிறது.

ஏடிஎம் வித்டிரா கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.21ஆக உயர்த்தப்படுகிறது.

நிதி அல்லாத பரிவர்த்தனைகளில், பரிமாற்ற கட்டணம் தற்போது ரூ .5 முதல் ரூ .6 ஆக திருத்தப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Reserve Bank Of India Atm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment