Advertisment

சிறு சேமிப்பை ரூ.2 கோடியாக மாற்றுவது எப்படி? இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க!

சிறிய முதலீட்டில் கோடீஸ்வரர் ஆக தேசிய ஓய்வூதிய திட்டம் வழி வகுக்கிறது.

author-image
WebDesk
New Update
Tips to turn your small monthly investment into over Rs 2 crore

புதிய பென்சன் திட்டம் 2003ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டில் பிரபலமான பெரும்பாலான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) போன்ற குறைந்த ஆபத்து மற்றும் அதிக வருமானம் கொண்ட முதலீட்டுத் திட்டங்களுக்கு பலர் திரும்பியுள்ளனர்.

அந்த வகையில், நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது இதுபோன்ற மற்றொரு முதலீட்டு விருப்பமாகும், இது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டு இலக்குகளில் ஒன்றாகும்.

Advertisment

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) குறைந்த செலவில் முதலீடு செய்யும் வாய்ப்பைத் தேடும் ஒருவருக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் வரி விலக்குகள் மூலம் பெரிய அளவில் சேமிக்கிறது.

அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் எளிதாக நிர்வகிக்கக்கூடிய ஆன்லைன் போர்டல் ஆகியவை சந்தாதாரர்களை ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பாதுகாக்க ஊக்குவிக்கின்றன.

அடுத்து, சிறு சேமிப்பை ரூ.2 கோடியாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

இந்தத் திட்டத்தின் பங்களிப்பு 30 ஆண்டுகள் ஆகும். முதலீட்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கப்படும். மாத ஓய்வூதியம் ஆக ரூ.46146 கிடைக்கும்.

ரிட்டயர்மெண்ட் கார்ப்ஸ் ஆக ரூ.2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 119 கிடைக்கும். இதற்கு மாதம் நீங்கள் ரூ.12 ஆயிரத்து 500 ரூபாய் பிரிமீயம் ஆக செலுத்த வேண்டும்.

உதாரணமாக நீங்கள் 30 வயதில் சேமிப்பை தொடங்கினால் கூட 60ஆவது வயதில் ரூ.2 கோடிக்கு அதிபதி ஆகிவிடலாம்.

மேலும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஆக்டிவ் மற்றும் ஆட்டோ சாய்ஸ் என இரு வாய்ப்புகள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment