Advertisment

Today Gold rate: அமெரிக்க தாக்கம்... சரிவுக்கு மத்தியில் சற்றே நிமிர்ந்த தங்கம் விலை!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4647 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37,176 ஆக உள்ளது. நாட்டின் மற்ற நகரங்களான டெல்லி, பாட்னா, லக்னோ, கொல்கத்தா மற்றும் கேரளத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

அமெரிக்க வங்கிகளில் வட்டி உயர்வு, பணவீக்கம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக சிறிது சிறிதாக சரிந்துவருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது. அதேபோல் 24 காரட் தூயத் தங்கமும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து விற்பனை ஆகிவருகிறது.

வெள்ளியை பொருத்தமட்டில் கிராம் ரூ.61.30 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.61,300 என விற்பனையாகிவருகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4647 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37,176 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.5049 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் (8 கிராம்) ரூ.40,392 என உள்ளது.

நாட்டின் மற்ற நகரங்களான டெல்லி, பாட்னா, லக்னோ, கொல்கத்தா மற்றும் கேரளத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை குறித்து பார்க்கலாம்.

மும்பை - ரூ.46,500

டெல்லி – ரூ.46,500

கொல்கத்தா – ரூ.46,500

பெங்களுரு – ரூ.46,580

ஹைதராபாத் - ரூ. 46,500

கேரளா - ரூ.46,500

அகமதாபாத் - ரூ.46,540

ஜெய்ப்பூர் - ரூ.47,050

லக்னோ - ரூ.46,650

பாட்னா - ரூ.46,530

சண்டிகர் - ரூ.47,650

புவனேஸ்வர் - ரூ.46,500

Tamil Nadu Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment